சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மு.க. ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் வேட்பாளராக மு.க. அழகிரியை அறிவிப்பாரோ ரஜினி?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற கூடாது; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்கவே தாம் களமிறங்கியிருப்பதாக பிரகடனப்படுத்தியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அப்படியானால் தமது கட்சியின் முதல்வர் வேட்பாளராக மு.க.அழகிரியை ரஜினிகாந்த் அறிவிப்பாரோ? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    அரசியலுக்கு வருவாரா ? மாட்டாரா ? ரஜினியின் முடிவுதான் என்ன ?

    திராவிட கட்சிகளின் அரசியலை முடிவுக்கு கொண்டுவருவோம் என பாஜகவின் குரலில் முழங்கியிருக்கிறார் ரஜினிகாந்த். இன்னொரு பக்கம் சிஸ்டம் மாற்றம், மாற்று அரசியல், புரட்சி வெடிக்கனும் என சீமான் பாணியிலும் ஆவேசப்பட்டிருக்கிறார் ரஜினிகாந்த்.

    ரஜினிகாந்த் புரட்சி, கொள்கை, அரசியல் மாற்றம் என எதுபேசியிருந்தாலும் 2021 தேர்தலில் மட்டும்தான் தமது கட்சி போட்டியிடும் என தெளிவுபடுத்தியிருக்கிறார். அதேபோல் தாம் முதல்வர் வேட்பாளர் நிச்சயம் இல்லை எனவும் அறிவித்துவிட்டார். இதனையே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினி பேசியதால் யார் முதல்வர் வேட்பாளர் என பெரும் விவாதமே நடைபெற்றது.

    சர்ச்சையில் ரஜினி சிக்கும்போது.. சரியாக விஜயை உள்ளே இழுத்து விடுறாங்களே.. இன்று என்னாச்சு பாருங்க சர்ச்சையில் ரஜினி சிக்கும்போது.. சரியாக விஜயை உள்ளே இழுத்து விடுறாங்களே.. இன்று என்னாச்சு பாருங்க

    பிரதான எதிரி ஸ்டாலின்

    பிரதான எதிரி ஸ்டாலின்

    ரஜினிகாந்த் கூறுவதை வைத்துப் பார்த்தால் அவருக்கு பிரதான எதிரியாக இருப்பது மு.க.ஸ்டாலின்தான்.. ஸ்டாலினை வீழ்த்தக் கூடிய மாற்று முதல்வர் வேட்பாளர் யார்? என்ற ரேஸில் இதுவரை யூகிக்கப்பட்ட எவராலும் ஒரு சிறுசிறு சலசலப்பை கூட உருவாக்கிவிட முடியாது. அதை ஸ்டாலின் எளிதாக கடந்து விடுவார். அதேநேரத்தில் ஸ்டாலினை திகைக்க வைக்க, திமுகவினரை திணறவைக்க ரஜினிகாந்திடம் ஒரு அஸ்திரம் இருக்கிறது.

    முதல்வர் வேட்பாளர் அழகிரி?

    முதல்வர் வேட்பாளர் அழகிரி?

    அந்த அஸ்திரமும்கூட இன்னமும் அடிபட்ட சிங்கமாக உறுமிக்கொண்டே இருக்கிறது. அதற்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் தாம் யார் என காட்டுகிற களமாக அதகளப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆம் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரிதான் அந்த அஸ்திரம். கருணாநிதியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போதும் அழகிரி ஆதரவாளர்கள் அமைதி காத்தனர்.

    ஆதரவாளர்கள் காத்திருப்பு

    ஆதரவாளர்கள் காத்திருப்பு

    கருணாநிதி மறைவுக்குப் பின்னர் அழகிரி மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்படலாம் என பேச்சுகள் ஒவ்வொருமுறையும் வருவதும் பின்னர் அது நடக்காமல் போவதும் தொடர் கதையாகிவிட்டது. அத்துடன் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் அனைவரையும் திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் கட்சியில் இருந்தே ஒதுக்கி வைத்துவிட்டனர். இன்னமும் அழகிரி அண்ணனை நம்பி அந்த ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர். அழகிரியும் ரஜினிகாந்தும் ஏற்கனவே மிகவும் நெருக்கமானவர்களும் கூட.

    இதுதான் காரணமா?

    இதுதான் காரணமா?

    அழகிரியின் சுபாவத்துக்கு இத்தனை காலம் அவர் அரசியலைவிட்டு மவுனமாக ஒதுங்கி இருப்பதன் பின்னணியில் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். அதனால் ரஜினிகாந்த் தமது கட்சியின் முதல்வர் வேட்பாளராக மு.க. அழகிரியை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. அப்படி அறிவித்துவிட்டால் அடுத்து நடப்பது எங்கள் ராஜ்யம் என அசால்ட்டு காட்டுகின்றனர் அழகிரி ஆதரவாளர்கள்.

    English summary
    Rajinikanth may field Former Union Minister MK Azhagiri as his party Chief Minister Candidate for upcoming TamilNadu Assembly Elections 2021.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X