சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்கள் சேவை கட்சி ரஜினியுடையதா.. பதிவு செய்த முகவரியில் யாரு இருக்காங்க தெரியுமா? செம திருப்பம்

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் சேவை கட்சி என்ற பெயரில், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி, நடிகர் ரஜினிகாந்தின் கட்சி என்று தகவல் வெளியான நிலையில் அதில் ஒரு முக்கியமான திருப்பம் நிகழ்ந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், தான் கட்சி தொடங்கப் போகும் அறிவிப்பை முறைப்படி டிசம்பர் மாதம் 31ம் தேதி அறிவிக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சென்னை: ரஜினியுடைதா மக்கள் சேவை கட்சி…? பதிவு முகவரியில் வெளியான திடீர் டுவிஸ்ட்!

    ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அரசியல் பிரவேசம் அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில்தான், இந்திய தேர்தல் ஆணையத்தின் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ரஜினி பிறந்தநாளில் அனைவருக்கும் இலவச டீ... பட்டய கிளப்பும் கன்னியாகுமரி ரசிகர்! ரஜினி பிறந்தநாளில் அனைவருக்கும் இலவச டீ... பட்டய கிளப்பும் கன்னியாகுமரி ரசிகர்!

    ஆட்டோ சின்னம்

    ஆட்டோ சின்னம்

    இந்த கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அது ரஜினிகாந்தின் கட்சியாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், கட்சி முகவரியில், நம்பர் 10, பாலாஜி நகர், சென்னை எர்ணாவூர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான், சில ஊடகங்கள் அந்த முகவரிக்கு நேரில் சென்று பார்த்தனர்.

    வேறு நபர் பெயரில் கட்சியா?

    வேறு நபர் பெயரில் கட்சியா?

    அப்போது, அங்கு தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் வீடு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில், ஒரு கட்சியை துவங்குபவர், இன்னொருவரின் முகவரியில் அதை துவங்க மாட்டார். ஏனெனில், பிற கட்சியை சேர்ந்த யாராவது அந்த நபரை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டால் கட்சியின் அடிப்படையே ஆட்டம் கண்டுவிடும். இந்த பயத்தின் காரணமாக இவ்வாறு யாரும் செய்ய மாட்டார்கள். எனவே இது ரஜினிகாந்த் கட்சியாக இருக்க முடியாது என்று தெரிவிக்கிறார்கள் அந்த அரசியல் பார்வையாளர்கள். அதே நேரம் வேறு சில அரசியல் பார்வையாளர்கள் வேறு மாதிரி கருத்து தெரிவிக்கிறார்கள்.

    பேக் அப் கட்சி

    பேக் அப் கட்சி

    ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி கட்சி அறிவிப்பு பற்றி தகவல் வெளியிட உள்ளார். மக்கள் சேவை கட்சி என்று இப்போது வெளியாகியுள்ள கட்சி பெயர், அவரது பேக் அப் கட்சியாக இருக்கக் கூடும். அதாவது, தான் விரும்பக்கூடிய கட்சியின் பெயரை பதிவு செய்ய முடியாமல் போனால், இந்த கட்சியை ரஜினிகாந்த் வாங்கி பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

    ரஜினிகாந்த் விருப்பம்

    ரஜினிகாந்த் விருப்பம்

    கட்சி அறிவிப்பு தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இரட்டை விரலை உயர்த்தி காட்டி, அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது இதை நிரூபிப்பதாக உள்ளது. எனவே, ஆட்டோ சின்னம் மற்றும் மக்கள் சேவை கட்சி ஆகிய இரண்டுமே பேக் அப் என்று சொல்லக்கூடிய ஏற்பாடு என்று அடித்துச் சொல்கிறார்கள் அவர்கள். எது எப்படியோ டிசம்பர் 31ம் தேதி ரஜினிகாந்த் தனது கட்சிப் பெயரை அல்லது கட்சி துவங்கும் தகவலை அறிவிக்கும் போது இந்த சந்தேகங்களை அனைத்துக்கும் உறுதியான ஒரு முடிவு கிடைக்கும் என்பது மட்டும் திண்ணம்.

    English summary
    Actor Rajinikanth party name is revealed but party office address is located in Chennai where Rajinikanth fans club's member residing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X