மாமனாரைப் போல.. சினிமா கனவில் மிதக்கும் ரஜினிகாந்த் மருமகன் அச்சத்தில் தடை போடும் மனைவி செளந்தர்யா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் விசாகன் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க ஆசைப்படுகிறார். ஆனால் அவரது மனைவி செளந்தர்யாவோ, விசாகனின் சினிமா கனவுக்கு தடையாக முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே வருகிறார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா, இளம் தொழிலதிபரான விசாகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் திருமணத்துக்கு இரு வீட்டாரின் ஒப்புதல் உண்டு. விசாகனின் தந்தை இந்தியாவில் புகழ்பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர். சுமார் ரூபாய் 6,000 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு அவர் அதிபதி.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அவையில் என்ன நடக்கும்? என்னென்ன மசோதாக்கள் தாக்கலாகும்?

விசாகனின் சினிமா ஆசை
விசாகன்-செளந்தர்யா திருமணம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ரஜினிகாந்த் மகளுக்கு மறுமணம் செய்து வைத்ததும் பாராட்டப்பட்டது. இன்னொரு பக்கம் இளம் தொழிலதிபராக இருந்தாலும், ஒரு ஃபேஷனுக்காக சினிமா ஹீரோ ஆக வேண்டும் என்பது விசாகனின் ஆசை.

அமெரிக்காவில் சினிமா படிப்பு
அதனால் அமெரிக்காவில் உள்ள நடிப்பு கல்லூரி ஒன்றில் சேர்ந்து நடிப்பு கலையை அவர் கற்றுத் தேர்ந்திருக்கிறார். விசாகனும் ஹேண்ட் சம்மாக, ஒரு ஹீரோ ரேஞ்சில் இப்போது இருக்கிறார். சினிமாவில் அவரை கொண்டு வர பிரபல இயக்குநர்கள் விசாகனை அணுகியுள்ளனர்.

இயக்குநர்கள் தீவிரம்
ரஜினியின் மருமகன் என்கிற புகழும் இருப்பதால் அவரை சினிமாவிற்குள் கொண்டு வர இயக்குநர்கள் அணுகுகின்றனர். இதுகுறித்து, மனைவி செளந்தர்யாவிடம் விசாகன் சொல்ல, அவரின் சினிமா கனவுகளுக்கு தடை போட்டாராம் செளந்தர்யா. சினிமாவில் நடித்து புகழ் பெறுகிறபோது, விசாகனை யாரேனும் கொத்திக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்கிற அச்சம்தான் செளந்தர்யா தடை போட காரணம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

செளந்தர்யா முட்டுக்கட்டை?
இது தொடர்பாக செளந்தர்யாவிடம் விரிவாகவே விளக்கம் அளித்த விசாகன், சினிமா எனக்கு முழு நேரத் தொழிலாக இருக்காது; எங்க பிசினஸ்தான் மிக முக்கியம். ஒரு ஹாபிக்காக ஒரு திரைப்படம் பண்ணலாமே என சொல்லி இருக்கிறார். ஆனால் இதனையும் ஏற்க மறுக்கிறார் செளந்தர்யா. இதனால் விசாகனும் வரது குடும்பத்தினரும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் என்கின்றன ரஜினிகாந்துக்கு நெருக்கமான வட்டாரங்கள். அனேகமாக விரைவில் ரஜினிகாந்த் இந்த பஞ்சாயத்தில் தலையிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது.