சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவில் பாரம்பரியங்களில் கோர்ட் தலையிட கூடாது.. 2.O கொண்டாட்டத்திற்கு நடுவே ரஜினி கொடுத்த பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    2.O கொண்டாட்டத்திற்கு நடுவே ரஜினியின் சிறப்பு பேட்டி

    சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்தியா டுடே ஆங்கில ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் குறித்த கேள்விக்கு, ரஜினிகாந்த் கூறியதாவது: சில கோயில்களில் சில பாரம்பரிய வழக்கங்கள் இருக்கும். அதில் நீதிமன்றம் தலையிடுவதை தவிர்க்கலாம். மதரீதியான விஷயங்களில் நீதிமன்றம் யாரையும் புண்படுத்திவிட கூடாது என்பதே எனது கருத்து. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Rajinikanth says, Courts should not interfere in the matter of faith

    2.O திரைப்படம் குறித்து, ரஜினிகாந்த் கூறுகையில், 2.O ஷங்கரின் திரைப்படம் கிடையாது. டெக்னிஷியன்களின் திரைப்படம். வேறு படங்களில் இயக்குநர்களுக்கு, நான் எனது கருத்தையும் தெரிவிப்பேன். ஆனால் இந்தப்படத்தில் முழுக்க முழுக்க ஷங்கர் முடிவுக்கே விட்டு விட்டேன்.

    ஷங்கர், என்னிடம் விவாதித்தார். இருப்பினும் கூட 90% முடிவுகள், அவருடையது மட்டுமே. படத்தில் உள்ள கதைக்கரு, உருவாக்க திறன் ஆகிய அனைத்துமே ஹாலிவுட் திரைப்படங்களுக்கு போட்டியிடுவதை போல உள்ளது. எந்திரனை விட இது அட்வான்ஸ் திரைப்படம். இன்னொரு மட்டத்திற்கு சினிமாவை கொண்டு சென்றுள்ளோம்.

    இதில், உலகளாவிய விஷயத்தை பற்றி பேசியுள்ளோம். நான் ஒரு எண்டர்டெயினர். ரஜினிகாந்த் திரைப்படம் என்றால் குடும்பத்தோடு வந்து ரசித்து செல்ல முடியும். அவர்களை நான் என்டர்டெயின் செய்ய வேண்டும். அதனூடே ஒரு மெசேஜ் சொல்கிறோம். நான் சினிமாவையும் அரசியலையும் சேர்த்து குழப்பிக் கொள்ள விரும்பவில்லை. இது முழு பொழுதுபோக்கு திரைப்படம். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

    English summary
    Rajinikanth says, Courts should not interfere in the matter of faith, Temple and old traditions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X