சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கந்தனுக்கு அரோகரா.. எம்மதமும் சம்மதமே.. தமிழக அரசுக்கு நன்றி... ரஜினி போட்ட திடீர் டிவீட்!

Google Oneindia Tamil News

சென்னை: எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என ட்விட்டரில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் கருப்பர் கூட்டத்தின் வீடியோவை டெலிட் செய்ய உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Rajinikanth Voice On Kantha Sashti Kavasam and Murugan Issue | Kanthanukku Arokara

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

    இனி மேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியணும்.. எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!! என தெரிவித்துள்ளார். இதை #கந்தனுக்கு_அரோகரா என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்டார்.

    தனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள்.. இது அவசியமா.. இத்தனை பிரச்சினை இருக்கே? தனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள்.. இது அவசியமா.. இத்தனை பிரச்சினை இருக்கே?

    கந்த சஷ்டி கவசம்

    கந்த சஷ்டி கவசம்

    தமிழ் கடவுளான முருகன் மற்றும் கந்த சஷ்டி கவசத்தை கொச்சையாக சித்தரித்து கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் காணொலி ஒன்று வெளியிடப்பட்டது. இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அதிரடி சோதனை

    அதிரடி சோதனை

    இதில் வேளச்சேரி செந்தில்வாசன்(49), நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திர நாகராஜன் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுரேந்திர நடராஜன் அளித்த தகவலின் படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தி நகர் நியூ போக் சாலையில் உள்ள கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்.

    இந்து மதம்

    இந்து மதம்

    இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் வீடியோக்களை கைப்பற்றினர். அதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகத்தை மூடி சீல் வைத்துவிட்டனர். இதனிடையே கருப்பர் கூட்டத்திற்கு எதிராக பாஜக, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தினர்.

    டெலிட் செய்த வீடியோ

    டெலிட் செய்த வீடியோ

    தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட கேமராமேன் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகன் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் இந்து மதக்கடவுள்களுக்கு எதிராக பதிவு செய்து இருந்து 500 வீடியோக்களை கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீக்கியுள்ளனர்.

    English summary
    Rajinikanth says that all the religion are one. He says Kanthanukku Arokara!
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X