சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாத்துக்கும் ஒரு தலையெழுத்து இருக்கு.. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவோம்.. ரஜினி

Google Oneindia Tamil News

சென்னை: எல்லாத்துக்கும் ஒரு தலையெழுத்து இருக்கிறது. தமிழகத்தின் தலையெவுத்தை மாற்றுவோம் என ரஜினிகாந்த் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக தனது ட்விட்டரில் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்புகளை டிசம்பர் 31- 202- இல் வெளியிடுவேன் என அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்
டிசம்பர் 2017-இல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறியிருந்தேன். சட்டமன்ற தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்னால் கட்சி தொடங்கி போட்டியிடுவேனு சொல்லியிருந்தேன்.

தமிழக மக்கள்

தமிழக மக்கள்

லீலா பேலஸில் உங்களை சந்திக்கும் போது மக்கள் முன்பு எழுச்சி வேண்டும் என்றேன். இதற்காக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முயன்றேன். ஆனால் கொரோனாவால் அது முடியவில்லை. நான் சொன்னதை காப்பாற்றுவேன். எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுவிட்டது. எனவே இந்த நேரத்தில் என்னை வாழ வச்ச தமிழக மக்களுக்கு என்னால் முடிந்ததை செய்ய முற்படுகிறேன்.

கவலையில்லை

கவலையில்லை

கடந்த 2010-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று நான் உயிரோடு இருந்ததற்கு காரணம் ரசிகர்களின் பிரார்த்தனைதான். எனவே இந்த ஒரு காரணத்திற்காக ரசிகர்களுக்காக என் உயிரே போனாலும் கவலையில்லை. அதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்.

மக்கள்

மக்கள்

நான் ஒரு கருவிதான். அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நான் வந்த பிறகு வெற்றியடைந்தால் அது மக்களுடைய வெற்றியாகவே கருதப்படும். தோல்வியடைந்தால் அது மக்களுடைய தோல்வி. இந்த மாற்றத்திற்கு மக்கள் துணையாக நிற்க வேண்டும் என மக்களை இரு கை கூப்பி கேட்டுக் கொள்கிறேன். எல்லா நாடுகளுக்கும் ஒரு தலையெழுத்து இருக்கும்.

மாற்ற வேண்டிய

மாற்ற வேண்டிய

அது போல் தமிழகத்திற்கும் தலையெழுத்து உள்ளது. எனவே தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆட்சிமாற்றம், அரசியல் மாற்றம், இப்போ இல்லைன்னா எப்பவுமே இல்லை. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், வணக்கம் என்றார் ரஜினிகாந்த்.

English summary
Rajinikanth says that Its time to change the fate of the Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X