சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மா.செக்களுடன் இனிமையான சந்திப்பு.. ஆனால் ஒரு ஏமாற்றம்.. ரஜினிகாந்த் பரபர பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியதில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் இருக்கிறது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    களைகட்டுகிறதா ரஜினியின் அரசியல் பிரவேசம்.. மாவட்ட செயலாளர்களை சந்திப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

    கட்சித் தொடங்குவதாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினிகாந்த் அறிவித்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் கட்சி தொடங்கவில்லை. இந்த நிலையில் இன்று தொடங்குவார், நாளை தொடங்குவார் என 2 ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடிவிட்டன.

    இன்றைய தினம் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் சந்திப்பு கூட்டம் நடத்தினார். அவர் ஒன்றரை மணி நேரம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது குறித்து அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த பேட்டியின்போது சந்திப்பு குறித்து விளக்கிய ரஜினி கடைசியில் ஒரு குழப்பத்தையும் வைத்து விட்டு கிளம்பினார்.

    ஆலோசனை கூட்டம்

    ஆலோசனை கூட்டம்

    செய்தியாளர்களிடம் ரஜினி பேசுகையில், ஓராண்டுக்கு பிறகு நான் மாவட்டச் செயலாளர்களை சந்தித்தேன். கட்சி தொடங்குவது குறித்து பேசினோம். நாங்கள் உள்ளே நிறைய விஷயங்கள் குறித்து பேசினோம். மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியதில் அவர்கள் மிகவும் திருப்தி அடைந்தனர். ஆனால் ஒரு விஷயத்தில் தனிப்பட்ட முறையில் எனக்கு ஏமாற்றம் உள்ளது.

    நிரப்புவது

    நிரப்புவது

    அதுகுறித்து நான் பின்னர் கூறுகிறேன். தமிழக அரசியலில் வெற்றிடத்தை நிரப்புவது குறித்து நேரம்தான் பதில் சொல்ல வேண்டும். அது போல் கமலுடன் இணைந்து வெற்றிடத்தை நிரப்புவது குறித்தும் காலம்தான் பதில் சொல்லும். சிஏஏ குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இஸ்லாமிய அமைப்பினரிடம் தெரிவித்தேன். அவர்களுக்கு நான் உதவிகரமாக இருப்பேன் என தெரிவித்தார் ரஜினிகாந்த்.

    போராட்டம்

    போராட்டம்

    ரஜினி தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் குறித்து பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது. முன்னதாக, குடியரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் அந்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை. இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும் என்ற நம்பிக்கை இல்லை. இந்தச் சட்டத்தால் யாரேனும் ஒரு முஸ்லீம்களுக்கு பிரச்சினை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று கூறியிருந்தார். இதிலும் குழப்பம் ஏற்பட்டது.

    உயிரிழப்பு

    உயிரிழப்பு

    அதேபோல டெல்லி வன்முறையின் போது உயிரிழப்புகள் குறித்து ரஜினிகாந்த் பேசுகையில் போராட்டத்தில் வன்முறை ஏற்படக் கூடாது. மத்திய அரசு சட்டத்தை திரும்ப பெறும் நம்பிக்கை எனக்கில்லை. எனவே போராட்டம் நடத்துவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. வன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் என மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார் ரஜினி. அதுவும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று அவர் அளித்த பேட்டியில் ரசிகர் மன்ற நிர்வாகிகளால் தனக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாக கூறியிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Rajinikanth says that i am disappointed in a issue. I discussed with district secretaries about launching political party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X