சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

#Petta கஜா புயல்.. அரசை மட்டும் நம்பாதீர்... எல்லோரும் சேர்ந்து உதவ வேண்டிய நேரமிது- ரஜினி மெசேஜ்

Google Oneindia Tamil News

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் மட்டும் நிவாரணம் செய்ய முடியும் என்று நினைத்தால் தவறு. எல்லோரும் சேர்ந்து கை கொடுத்து உதவ வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி பேசினார். கஜா புயல் தொடங்கி பேட்ட படம் வரை பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா மிக மிக பிரம்மாண்டமாக சென்னையில் நடந்தது. இதில் பல வைரல் சம்பவங்கள் நடந்தன.

கஜா புயல்

கஜா புயல்

அதில் பேசிய ரஜினிகாந்த், கஜா புயல் நிவாரணத்திற்காக, என் மூலமாகவும், மக்கள் மன்றம் மூலமாகவும் நிறைய செய்துள்ளோம். செய்து வருகிறோம். மிகப் பெரிய புயல் இது. நினைத்துக் கூட பார்க்க முடியாத பேரழிவு.

உலகளவில் வெற்றி

உலகளவில் வெற்றி

அரசால் மட்டும் நிவாரணம் செய்ய முடியும் என்று நினைத்தால் தவறு. எல்லோரும் சேர்ந்து கை கொடுத்து உதவ வேண்டும். 2.ஓ வெளியாகி உலகளவில் வெற்றி அடைந்திருக்கிறது.

ரூ. 1 கோடி

ரூ. 1 கோடி

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வடநாடு, வெளிநாடு மக்களுக்கு நன்றி. ஷங்கருக்கும், தயாரிப்பாளருக்கு போய்ச் சேர வேண்டும். 2.ஓ ரோபோவுக்கு பிள்ளையார் சுழி போட்டதே கலாநிதி மாறன்தான். அந்தப் படம் வெற்றி பெற்றதும் என் வீட்டுக்கு வந்து 1 கோடி ரூபாய் செக் கொடுத்தார். எனக்கு மட்டுமல்ல, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கும் கூட கொடுத்தார். பின்னர் அதை லைக்கா தயாரித்தது.

ஒப்பு கொண்ட விஜய் சேதுபதி

ஒப்பு கொண்ட விஜய் சேதுபதி

பேட்ட படத்தின் லொகேஷன் எல்லாமே சூப்பர்ப். கார்த்திக் சுப்புராஜ் எனது மிகப் பெரிய விசிறி. படத்தில் ஒரு கேரக்டர் வரும். ஜித்து என்ற கேரக்டர். யார் என்று எனக்கு தோணவே இல்லை. விஜய் சேதுபதி செய்தால் எப்டி இருக்கும் என்று கேட்டார். பண்ணுவாரா என்று கேட்டேன். அடுத்த நாள் விஜய் சேதுபதி ஒத்துக் கொண்டதாக கூறினார். இது வில்லன் கேரக்டர் என்றார் ரஜினி.

English summary
Rajinikanth says that it's time to help for people who affected in Gaja
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X