சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோயிலின் ஐதீகத்தில் யாரும் தலையிடக் கூடாது- சபரிமலை குறித்து ரஜினிகாந்த் கருத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி பேட்டி-வீடியோ

    சென்னை: கோயிலின் ஐதீகத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று சபரிமலை குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் யாரும் நுழையக் கூடாது என்பது காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபு ஆகும். இந்த மரபை மாற்றும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    Rajinikanth says that no one interfere in temple traditions

    இதையடுத்து தீர்ப்புக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐப்பசி மாதத்தையொட்டி கோயில் நடைத் திறப்புக்காக வந்த பெண்கள் மிரட்டி திருப்பி அனுப்பப்பட்டனர். இன்னும் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில் பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்து கொண்டு காசியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பெண்களுக்கு சம உரிமை உள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு பெண்களுக்கு ஆதரவாகவே உள்ளது.

    கட்சி துவங்கும் வேலை 90 சதவீதம் முடிந்துவிட்டது.. ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி கட்சி துவங்கும் வேலை 90 சதவீதம் முடிந்துவிட்டது.. ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

    ஆனால் அதை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது. கோயில்களுக்கான ஐதீகங்களில் மற்றவர்கள் தலையிடக் கூடாது. மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பார்த்து செய்ய வேண்டும் என்றார் ரஜினிகாந்த்.

    English summary
    Rajinikanth says that despite ladies has equal rights, no one interfere in temple Aagama rules.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X