சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அறிவே இல்லாமல் ஓட்டு போடும் 30 சதவீத பெண்கள்.. ரஜினிகாந்த் அதிர்ச்சி பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: 30 சதவீத பெண்கள் அறிவே இல்லாமல் ஓட்டு போடுகிறார்கள் என ரஜினிகாந்த் தெரிவித்தது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    30 சதவீத பெண்கள்அறிவே இல்லாமல் ஓட்டு போடுறாங்க ... ரஜினி சர்ச்சை பேச்சு

    கடந்த வாரம் மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்களுடன் முதல்வர் வேட்பாளர் குறித்த ஆலோசனை செய்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் இன்றைய தினம் மாவட்டச் செயலாளர்களை சந்தித்தார்.

    இதையடுத்து சென்னை லீலா பேலஸில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அவர் கூறுகையில் சிஸ்டம் சரி செய்யாமல் ஆட்சி நடந்தால் நன்றாக இருக்காது. புதியவர்கள், இளைஞர்கள் கட்சிப் பதவிக்கு வருவதில்லை. அரசியல்வாதிகளின் வாரிசுகள்தான் வருகிறார்கள்.

    எழுச்சி ஏற்பட்டால்தான் அரசியலுக்கு வருவேன்.. ரஜினிகாந்த் ஒரே போடு எழுச்சி ஏற்பட்டால்தான் அரசியலுக்கு வருவேன்.. ரஜினிகாந்த் ஒரே போடு

    அதிமுக

    அதிமுக

    அசுரபலத்துடன் கூடிய திமுகவையும், அதிமுகவையும் நாம் எதிர்கொள்ளப்போகிறோம். ஆட்சியையும், குபேரன் கஜானாவையும் அதிமுக கையில் வைத்திருக்கிறது. ஒரு நல்ல அரசியல் தலைவனை உருவாக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. கட்சி வேறு ஆட்சி வேறு என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்க வேண்டும். தமிழ் மண் புரட்சிகளுக்கு பெயர் பெற்ற மண். மக்களில் சிலரிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லை.

    30 சதவீதம்

    30 சதவீதம்

    அறிவில்லாமல் இருக்கின்றனர். மக்கள் அலைக்கு முன்பாக அசுரபலம் ஒன்றுமில்லை. 50 சதவீத பெண்களில் 20 சதவீதம்தான் யோசித்து ஓட்டு போடுகிறார்கள். 30 சதவீதம் பெண்கள் அறிவில்லாமல் ஓட்டு போடுகிறார்கள். யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது கூட தெரியவில்லை.

    முதல்வர் பதவி

    முதல்வர் பதவி

    முதலமைச்சர் பதவி வேண்டாம் என்பதில் நான் முன்பிருந்தே உறுதியாக இருந்தேன். மன்றப் பொறுப்பாளர்களுக்கு முன்னுதாரணமாக நானே பதவி வேண்டாம் என்று சொல்கிறேன். முதலமைச்சர் பதவி வேண்டாம் என நான் கூறுவது தியாகம் அல்ல என்றார் ரஜினிகாந்த். பெண்களுக்கு அறிவில்லை என்று கூறியதன் மூலம் தாய்குலங்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார் ரஜினி.

    உளறிய ரஜினி

    உளறிய ரஜினி

    சில பெண்களுக்கு அரசியல் புரிதல் இல்லை. அரசியலில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்ற தெளிவு இல்லை என கூறியிருந்திருக்கலாம். ஆனால் ஏதோ ப்ளோவில் அறிவில்லை என கூறிவிட்டார். அரசியல் என்றால் ஒரு பக்குவம் வேண்டும். ஆனால் இப்படி சாதாரண பிரஸ்மீட்டிலேயே ரஜினி உளறியுள்ளார் என்றால் கட்சி மாநாடு, பொதுக் கூட்டங்களில் எப்படி இருப்பார் என்பது பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது.

    English summary
    Rajinikanth says Some of the Women has no wisdom at all while they are going to polling station.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X