சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேசாமல் சீமானுடன் கை கோர்க்கலாம் ரஜினிகாந்த்.. எப்படி வாழ்த்தியிருக்கார் பாருங்க.. செம!

ரஜினிகாந்த் பேச்சினை சீமான் வரவேற்றுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: அப்ப்பாடா என்று பெருமூச்சு விட்டுள்ளார் சீமான்.. தான் முதல்வராக போவதில்லை என்று ரஜினியே அவர் வாயாலேயே சொல்லிவிட்டு போகவும், அந்த அறிவிப்பினை மனசார வாழ்த்தி.. வரவேற்பும் தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்!

Recommended Video

    அரசியல் வருகை...சீமான் பாணியை கையிலெடுத்த ரஜினி

    ரஜினி அரசியலுக்கு அதிகபட்சமான எதிர்ப்பை ஆரம்பத்தில் இருந்தே பதிவு செய்து வந்தது சீமான்தான்.. இதற்கு காரணம் அவர் மீது தனிப்பட்ட விருப்பு - வெறுப்பு கிடையாது.. தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆளவேண்டும் என்ற சிம்பிள் லாஜிக்தான்!!

    அந்த வகையில் இன்று ரஜினி பேசும்போது, "நான் முதல்வர் பதவியை நினைச்சுகூட பார்க்கலை.. இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகுதான் நான் அரசியலுக்கு வருவேன்.. ரஜினி முதலமைச்சர் இல்லை என பட்டிதொட்டியெங்கும் எழுச்சி ஏற்படுத்துங்கள்.. மக்களிடம் எழுச்சி ஏற்பட்ட பின் நான் அரசியலுக்கு வருகிறேன்.. 45 வயசுக்குள் இளைஞர்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

    சீமான்

    சீமான்

    இந்த செய்திதான் நாம் தமிழர் கட்சியினர் வயிற்றில் பாலை வார்த்துவிட்டு போயுள்ளது.. ரஜினி காலையில் பேச்சு குறித்து எந்த அரசியல் தலைவர்களும் இன்னமும் கருத்து தெரிவிக்காத நிலையில், எந்நேரமும் வறுத்து வாயில் போட்டு கொண்டிருந்த சீமான்தான் இதை முதல் ஆளாக வரவேற்று ட்வீட் செய்துள்ளார்... தன்னுடைய மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளார்.

    வரவேற்பு

    வரவேற்பு

    அதில், "திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்!" என்று பதிவிட்டுள்ளார். உண்மையிலேயே இந்த விஷயத்தில் சீமானை பாராட்டட வேண்டும்.. இதுவரை ரஜினி மீது காட்டியது தனிப்பட்ட விரோதம் இல்லை, அது வெறும் கருத்தியல் மோதல் என்பது மட்டுமே இந்த ட்வீட்டில் புரிய வருகிறது.

    தகுதிகள்

    தகுதிகள்

    அதேபோல, ரஜினிகாந்த் முன்வைக்கும் அனைத்து தகுதிகளும் உள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே என்பதை சீமான் மறைமுகமாக தெரிவித்துள்ளாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.. அதாவது ரஜினி எதிர்பார்க்கும் அத்தனையும் தங்களிடம் 10 வருடமாகவே உள்ளது என்பதை சீமான் சுட்டிக்காட்டுவது போலவும் இருக்கிறது.

    விமர்சனம்

    விமர்சனம்

    இவ்வளவு நாட்களாக பல்வேறு இடங்களில் ரஜினியின் அரசியல் நுழைவு குறித்து மறைமுகமாக விமர்சித்து வந்த சீமான் தற்போது ஆதரித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கவனிக்கவும் வைத்துள்ளது. மற்றொரு வகையில் இதை அரசியல் நாகரீகம் என்றுகூட எடுத்து கொள்ளலாம். இருந்தாலும் சீமானின் இந்த ட்விட்டை நாம் பாசிட்டிவ்வாகவே எடுத்து கொள்ளலாம்.

    ஒரே நோக்கம்

    ஒரே நோக்கம்

    காரணம் ரஜினி எதிர்பார்க்கும்படியேதான் நாம் தமிழர் கட்சியும் செயல்பட்டு வருகிறது என்பதையும் மறுக்க முடியாது. அதேபோல, சீமானுக்கு ஒரே எதிரி திமுக, அதிமுகதான்.. அதேபோல ரஜினி குறி வைத்துள்ளதும் திமுக, அதிமுகவைதான்.. அந்த வகையில் ரஜினியும், சீமானும் ஒன்று சேர்ந்தால்கூட நல்லாதான் இருக்கும்.. இணைவார்களா?!

    English summary
    Rajinikanth politics: Seeman Tweet about rajinikanth speech
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X