சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்வாணமாக ராமர் சிலை....இந்து ஏடு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதையும் ரஜினி தெரிஞ்சுக்கனும்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி

    சென்னை: 1971-ல் சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டில் ராமர் சிலை நிர்வாணமாக எடுத்துவரப்பட்டதாக செய்தி வெளியிட்டதற்கு இந்து ஏடு நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதையும் ரஜினிகாந்த் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் லெட்சுமணன் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையானது. 1971-ல் சேலத்தில் பெரியார் நடத்திய மாநாட்டில் ராமர் உருவம் நிர்வாணமாக கொண்டுவரப்பட்டு செருப்பு மாலை போடப்பட்டது என பேசினார்.

    Rajinikanth should know case on DK Salem Procession, slams Senior Journolist Laxmanan

    இது உண்மைக்கு புறம்பான தகவல் என பெரியார் இயக்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் தாம் பேசியது சரி; அவுட்லுக் ஏட்டில் இது தொடர்பாக செய்தி வந்துள்ளது என கூறி ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க மறுத்தார்.

    ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு.. போயஸ் கார்டன் வீடு முன் முற்றுகை போராட்டம்.. திவிகவினர் கைது!ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு.. போயஸ் கார்டன் வீடு முன் முற்றுகை போராட்டம்.. திவிகவினர் கைது!

    இது தொடர்பாக நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற மூத்த பத்திரிகையாளர் லெட்சுமணன் கூறியதாவது:

    சேலம் மாநாடு தொடர்பாக துக்ளக் செய்தி வெளியிட்ட பிறகு இந்து, எக்ஸ்பிரஸ், உள்ளிட்ட நாளிதழ்களும் வெளியிட்ட பிறகு திராவிடர் கழகத்தின் சார்பாக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, ரஜினிகாந்த் இதையும் தெரிஞ்சிருக்கனும்..

    இந்து நாளிதழ் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வெளிப்படையாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பிறகு வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

    நாங்க தவறாக பிரசுரித்துவிட்டோம் ராமர் சிலைக்கு செருப்பு மாலைகள் அணிவித்ததாக எழுதியதாகவும் அந்த சிலைகள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டன என்பதும் தவறான தகவல்.. எங்களுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கொடுங்க என்று கேட்டதால் இந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.

    இவ்வாறு பத்திரிகையாளர் லெட்சுமணன் குறிப்பிட்டார்.

    English summary
    Senior Journalist Laxmanan said that Actor Rajinikanth should know the case history on the 1971 DK' Salem Procession reports Published in Hindu and Express.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X