சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினிகாந்துக்கு அரசியல் வேண்டாம் விலகியே இருக்கலாம் - 51.43% ஒன் இந்தியா வாசகர்கள் கருத்து

ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகியே இருக்கலாம் என்று ஒன் இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் 51.43% வாசகர்கள் கூறியுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். அவரோ போர் வரட்டும் என்று சொன்னார், ஆன்மீக அரசியல் என்று சொன்னார். இப்போதோ உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் இருந்து விலகியே இருக்கலாம் என்று ஒன் இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் 51.43% வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற நடிகர்கள், நடிகையர்கள் பலரும் அரசியலில் குதிப்பார்கள். சில நடிகர்கள் பிரபல கட்சியில் இணைந்து எம்எல்ஏ, எம்பியாக உலா வருவார்கள். சில நடிகர்கள் தங்களுக்கு இருக்கும் ரசிகர்களின் பலத்தை பொறுத்து தனியாக கட்சி ஆரம்பித்து பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவார்கள்.

தமிழகத்தில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் மட்டுமே. பிற நடிகர்கள் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெற முடியவில்லை. அரசியல் கட்சி தொடங்கி தோல்வியை தழுவியவர் சிவாஜி கணேசன். விஜயகாந்த் எம்எல்ஏ, எதிர்கட்சித்தலைவர் என்று வலம் வந்தார், அரசியல் சாணக்கியத்தனத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கடந்த தேர்தலில் படு தோல்வியை தழுவினார்.

அரசியல் பயணம்

அரசியல் பயணம்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்களும், நலம் விரும்பிகளும் ஆசைப்படுகின்றனர். அவரும் கடந்த 3 ஆண்டு காலமாக இதோ அதோ என்று இழுத்துக்கொண்டே இருக்கிறார். அவர் வருவாரா? வரமாட்டாரா என்பது பற்றி தெளிவான முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

யோசிப்பது ஏன்

யோசிப்பது ஏன்

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவினால் வெளிநாடுகளில் போய் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு முழு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தாலும் சினிமாவில் நடித்து வருகிறார். அவ்வப்போது அரசியல் ஆசை எட்டிப்பார்த்தாலும் ஏதோ ஒன்று ரஜினிகாந்தை தடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. அரசியல் பற்றி எப்போதும் வாயை திறக்காமல் இருந்த கமல்ஹாசன் திடீரென கட்சி ஆரம்பித்து தேர்தலில் தனது கட்சி ஆட்களை களமிறக்கி ஆழம் பார்த்து வருகிறார்.

அரசியலுக்கு வரலாமா வேண்டாமா

அரசியலுக்கு வரலாமா வேண்டாமா

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமா அல்லது விலகியே இருக்க வேண்டுமா என்று ஒன் இந்தியா வாசகர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில்
ரஜினி வரவேண்டும், விலகியிருக்கலாம், திமுகவை ஆதரிக்கலாம், அது அவரது இஷ்டம்பா, அதிமுகவில் இணையலாம், கமல்ஹாசனை ஆதரிக்கலாம் என்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

16141 வாசகர்கள் பங்கேற்பு

16141 வாசகர்கள் பங்கேற்பு

இந்த கருத்துக்கணிப்பில் மொத்தம் 16141 வாசகர்கள் பங்கேற்றனர். அதில் 8302 பேர் ரஜினிகாந்துக்கு அரசியல் வேண்டாம் விலகியே இருக்கலாம் என்று கருத்து கூறியுள்ளனர். இது 51.43 சதவிகிதமாகும். அவர் வரவேண்டும் என்று 2917 பேர் கூறியுள்ளனர் இது 18.07 சதவிகிதமாகும்.

மக்கள் கருத்து

மக்கள் கருத்து

ரஜினிகாந்த் தனது நண்பர் கமல்ஹாசனை ஆதரிக்கலாம் என்று 10.31 சதவிகிதம் பேர் அதாவது 1664 பேர் வாக்களித்துள்ளனர்.
திமுகவை ஆதரிக்கலாம் என்று 1,430 வாக்களித்துள்ளனர். அது அவரது இஷ்டம்ப்பா என்று 1553 பேரும், அதிமுகவில் இணையலாம் என்று 275 பேரும் கூறியுள்ளனர்.

English summary
According to a poll conducted by One India, 51.43% of the readers have commented that actor Rajinikanth may stay away from politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X