சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2017ல் வந்த செய்தி.. பெரியாருக்கு எதிராக ரஜினி வெளியிட்ட அவுட்லுக் ஆதாரத்தில் இருப்பது என்ன?

நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட அவுட்லுக் பத்திரிக்கையில் பெரியார் குறித்து என்ன இருக்கிறது, அதில் என்ன ஆதாரம் உள்ளது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினி வெளியிட்ட அவுட்லுக் ஆதாரத்தில் இருப்பது என்ன?

    சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட அவுட்லுக் பத்திரிக்கையில் பெரியார் குறித்து என்ன இருக்கிறது, அதில் என்ன ஆதாரம் உள்ளது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

    பெரியார் குறித்து துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையாகி உள்ளது. துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்துக்கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை பற்றி யாருமே எழுதவில்லை.

    ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார்.இதனால் துக்ளக் பத்திரிக்கை நாடு முழுக்க பிரபலம் அடைந்தது, என்று ரஜினி குறிப்பிட்டார். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

     நான் பேசியது உண்மை.. பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி நான் பேசியது உண்மை.. பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி

    என்ன சர்ச்சை

    என்ன சர்ச்சை

    இந்த சர்ச்சையை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினி காந்த் விளக்கம் அளித்தார். அதில், பெரியார் பற்றி நான் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். சாரி. பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது.

    மன்னிப்பு முடியாது

    மன்னிப்பு முடியாது

    நான் இல்லாததை சொல்லவில்லை.இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. நான் கேள்விப்பட்டதை, படித்ததைதான் நான் சொல்கிறேன்.2017ல் அவுட்லுக் பத்திரிக்கையில் வந்ததைதான் நான் பேசினேன், என்று கூறினார்.

    அவுட்லுக் ஆதாரம்

    அவுட்லுக் ஆதாரம்

    இந்த நிலையில் ரஜினி வெளியிட்ட 2017 அவுட்லுக் பத்திரிகை கட்டுரையில் வந்திருக்கும் பெரியார் போராட்டம் குறித்த தகவலின் தமிழாக்கம் இதுதான்,

    1971 பிப்ரவரி மாதம் திராவிடர் கழகம் சார்பாக சேலத்தில் போராட்டம் நடந்தது. இதில் ராமர் மற்றும் சீதாவின் புகைப்படங்கள் உடை இன்றி வைக்கப்பட்டு, அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு பேரணி நடத்தப்பட்டது. இதை சோவின் துக்ளக் பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டது.

    ஆதாரம்

    ஆதாரம்

    1971ல் இதற்கான புகைப்படங்களை துக்ளக் வெளியிட்டது. இதற்கு எதிராக திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி, நடவடிக்கை எடுத்தார். துக்ளக் பத்திரிக்கைகளை பறிமுதல் செய்தார். இது சர்ச்சையானது. ஆனால் இதை கருணாநிதி முதலில் மறுத்தார். பின் மீண்டும் துக்ளக் இதற்கான ஆதாரங்களை புகைப்படம் மூலம் வெளியிட்டது.

    ரஜினி வெளியிட்டார்

    ரஜினி வெளியிட்டார்

    இதற்கான இதழ்கள் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அதற்கு அடுத்த பதிப்பில், கருணாநிதியை விமர்சித்து, சோ கார்ட்டூன் வெளியிட்டார், என்று அந்த அவுட்லுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இதைத்தான் ரஜினிகாந்த் தனது தரப்பு நியாயமாக இன்று வெளியிட்டார். அந்த அவுட்லுக் கட்டுரையில் 1971ல் இப்படி நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை. புகைப்படம் எதுவும் இல்லை.

    ஆதாரம் இல்லை

    ஆதாரம் இல்லை

    அதேபோல் 1971 சோ வெளியிட்ட துக்ளக் இதழ் குறித்தும் அவுட்லுக் பத்திரிகையில் எந்த தகவலும், புகைப்படமும் இல்லை. அதேபோல் பெரியார் போராட்டம் குறித்த புகைப்படங்கள் குறித்தும் விவரம் இல்லை. 1971ல் நடந்த போராட்டம் குறித்து 2017ல் வெளியான ஒரு செய்தியை ரஜினி ஆதாரமாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Rajinikanth show outlook article as a proof for his remark against Periyar .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X