சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவை வீழ்த்த நீங்கதான் "மாஸ் லீடர்".. நச்சுன்னு நங்கூரத்தை போட்ட அந்த 3 பேர் யார்.. பரபர தகவல்!

ரஜினிகாந்துடன் கூட்டணி பேச்சுவார்த்தையை 3 பேர் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி ரெடியாய்ட்டார் போல.. கூட்டணி தொடர்பாக, நச்சுன்னு நங்கூரத்தை 3 பேர் போயஸ் கார்டனில் போட்டுள்ளனராம்.. திமுகவை வீழ்த்த மாஸ் லீடர் நீங்கள் மட்டும்தான் என்றும் சொல்லி உள்ளனராம்.. ஆனால், யார் அந்த 3 பேர் என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் எழுந்து வரும் மிகப் பெரிய கேள்வியாக வலம் வருகிறது!

Recommended Video

    சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து மெளனம் கலைத்த Rajinikanth

    பாஜக தரப்பு ரஜினியை கூப்பிட்டு கொண்டுதான் இருக்கிறது. அமித்ஷா அழைத்துவிட்டார்.. தமிழிசையும் அழைப்பு விடுத்தார்.. ஆனால் ரஜினி பக்கம் சத்தமே இல்லை... முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் முதல் எச்.ராஜா வரை ரஜினிக்கு முட்டுக்கொடுத்து கொண்டு பேசிதான் வருகிறார்கள்... ஆனாலும் பாஜகவுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கவில்லை.

     rajinikanth: sources say that three political leaders negotiating with Rajinikanth

    இந்த சமயத்தில்தான், அதாவது, ஏப்ரல் மாசமே கட்சியை ஆரம்பிக்க போவதாக தகவல்கள் வந்த நிலையில், இந்த கொரோனா வந்து எல்லாவற்றையும் தடுத்துவிட்டது.. எனினும், இந்த வருட தொடக்கத்தில் இருந்தே ரஜினியின் அரசியல் வருகை அதிகமாக பேசப்பட்டது. ஒரு பக்கம் கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்பட்டது.. இன்னொரு பக்கம் மா.செ.க்களுடன் ரஜினியே நேரடியாக பங்கேற்று பேசி அரசியல் குறித்த அவர்களின் கருத்தையும் கேட்டதாக சொல்லப்பட்டது.

    எப்படி இரு தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லையோ, அதுபோலவே திமுக, அதிமுகவுடனும் கூட்டணி இல்லை.. இந்த 4 கட்சியுடன் கண்டிப்பா கூட்டணி இருக்காது. அதே நேரத்தில் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம்" என்று ரஜினி அப்போதைய கூட்டத்தில் பேசியதாக தகவல்கள் வந்தன.

    இந்நிலையில் திரும்பவும் ரஜினியுடன் கூட்டணி குறித்து சில தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்... குறிப்பாக 3 அரசியல் தலைவர்கள் மிக ஆர்வமாக உள்ளார்கள் என்கிறார்கள்.. அந்த 3 பேரில் 2 பேர் ஏற்கனவே நெருக்கமாக இருப்பவர்கள்தானாம்.. 3 பேருமே ரஜினியுடன் பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், என்னென்ன தொகுதிகள், எத்தனை தொகுதிகள் என்பது வரை அந்த தலைவர்கள் ரஜினியிடம் தெரிவித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    இதைதவிர மேலும் சில பேச்சுவார்த்தைகளும் நடக்கிறதாம்.. தற்போது லாக்டவுன் என்பதால், இவர்களுடன் வீடியோ மூலம் ரஜினிகாந்த் பேசி வருவதாகவும் தெரிகிறது.. ஆனால் இப்போதும் கூட்டணிக்கு தலைமை என்பதை ரஜினி ஏற்கவே இல்லையாம்.. திமுகவை வீழ்த்த உங்களை போன்ற மாஸ் தலைவர்கள்தான் தேவை" என்று காம்பரமைஸ் செய்து வருகிறார்களாம்.

    சீனா செய்வது தவறு... எங்கள் தேசப்பற்றை சந்தேகம் கொள்ள வேண்டாம் -கொதிக்கும் டி.ராஜா

    யார் அந்த 3 பேராக இருக்கும் என தெரியவில்லை.. ரஜினியை பொறுத்தவரை, திருநாவுக்கரசர் முதல் கராத்தே தியாகராஜன் வரை நெருக்கமாக உள்ளவர்கள்தான்.. அதேபோல ஏற்கனவே ரஜினியுடன் கூட்டணியா என்று கேட்டதற்கு, ஆமாம், இல்லை என்று எதையுமே சொல்லாமல், யூகத்தை வலுவாக நிலைநிறுத்தி உள்ளார் பாமகவின் டாக்டர் ராமதாஸ்.. அதிமுகவின் 4 அமைச்சர்கள் ரஜினியுடன் சேர தயாராகிவிட்டார்கள் என்று அப்போதே தகவல்களும் பரபரத்தன.. எனவே ரஜினியுடன் யார்தான் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்பது இப்போது வரை தெரியவில்லை. ஆனால், இவர்களின் ஒரே நோக்கம் திமுகவை வீழ்த்துவதுதானாம்!

    ரஜினி தரப்புக்காக இப்படி ஒரு இழுவை நடந்து கொண்டிருப்பதை திமுகவும் கவனிக்காமல் இல்லை. அதுவும் ரகசியமாக பார்த்துக் கொண்டுதான் உள்ளதாம். மறைமுகமாக நடக்கும் வேலைகளை திமுகவும் உன்னிப்பாக கவனிக்கிறது. அதை அழகாக டேக்கிள் செய்யும் வகையில் எதையாவது அதிரடியாக செய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. இதில் ஹைலைட் என்னவென்றால், ரஜினியுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் 3 கட்சிகளில், ஒரு கட்சி திமுக கூட்டணியில் உள்ளதாம்!

    English summary
    rajinikanth: sources say that three political leaders negotiating with Rajinikanth
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X