சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யாரையும் பகைச்சுக்காம 'நாகரீகமாக' பேட்டி... 'அடடே' ரஜினிகாந்த் ஆட்டம் தொடக்கம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    யாரையும் பகைச்சுக்காம நாகரீகமாக ரஜினி பேட்டி-வீடியோ

    சென்னை: பிரதமர் மோடி, ராகுல் காந்தி, கமல்ஹாசன என அனைத்து தரப்பினரையும் பாராட்டும் வகையிலும் உயர்வாகவும் பேசி தமது 'நிதானத்தை' சர்ச்சையில்லாமல் வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

    அரசியல் போருக்கு வருகிறேன் என ரஜினிகாந்த் அறிவித்து ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டிருக்கின்றன. திடீரென தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார்.

    அது சரி உங்கள் கொள்கை என்ன என்று கேட்டால் தலை சுற்றிடுச்சு என்றார். பொதுவாக நிதானத்தை பொதுக் கூட்டங்களிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் வெளிப்படுத்தாமல் பதற்றத்தைத்தான் ரஜினிகாந்த் இதுவரை வெளிப்படுத்தி வந்தார்.

    சரியா போச்சு போங்க.. மோடியின் அடிப்படை கொள்கையிலேயே கை வைத்த ரஜினிகாந்த்! சரியா போச்சு போங்க.. மோடியின் அடிப்படை கொள்கையிலேயே கை வைத்த ரஜினிகாந்த்!

    சமூக விரோதி விமர்சனம்

    சமூக விரோதி விமர்சனம்

    அதுவும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சமூகவிரோதிகள் என விமர்சித்தது மிகக் கடும் சர்ச்சையானது. இதன் பின்னர் அரசியல் கருத்துகளை அதிகம் பேசவில்லை ரஜினிகாந்த்.

    மோடியின் அழைப்பு

    மோடியின் அழைப்பு

    இந்நிலையில் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார்.

    புகழாரங்கள்

    புகழாரங்கள்

    அப்போது பிரதமர் மோடியை நேரு, ராஜீவ் காந்திக்குப் பின்னர் ஆளுமை மிக்க் தலைவர் என புகழாரம் சூட்டினார். அதேபோல் ராகுல் காந்தி, தலைவர் பதவியில் இருந்து விலகக்க் கூடாது என்றார். மேலும் லோக்சபா தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பெற்ற மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.

    ஆட்டம் தொடக்கம்

    ஆட்டம் தொடக்கம்

    இப்படி எந்த ஒரு தரப்பின் அதிருப்தியையும் சம்பாதிக்காமல் எல்லோரையும் மதித்த ரஜினிகாந்த் பேச தொடங்கியிருப்பது ஆச்சரியம்தான்... அதேநேரத்தில் அவரது அரசியல் கட்சி தொடக்கத்துக்கான சமிக்ஞையும் என்பதும் வெளிப்படாமலும் இல்லை.

    English summary
    Rajinikanth on Tuesday said that PM Modi is charismatic leader; Congress president Rahul Gandhi should not resign and prove that he can do it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X