சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வடை போச்சே... ரஜினி முடிவால் பகீர் ஏமாற்றத்தில் பாஜக- திமுக அதிமுக ஹேப்பி அண்ணாச்சி!

Google Oneindia Tamil News

சென்னை: உடல்நிலையை முன்வைத்து அரசியலுக்கு வராமல் ஜகா வாங்கும் ரஜினிகாந்த் முடிவை நம்ப முடியாமல் இன்னமும் நப்பாசையுடன் காத்திருக்கிறதாம் பாஜக. உள்ளுக்குள் மகிழ்ச்சி இருந்தாலும் இன்னமும் ரஜினிகாந்த் ஓட்டுகளை பிரிப்பாரோ என்கிற பீதியில் இருக்கின்றனவாம் அதிமுக-திமுக.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதற்கான பல்வேறு வியூகங்கள் அவர் தரப்பு உள்ளிட்ட பலராலும் கையாளப்பட்டன. இந்த நிலையில்தான் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்த ஒரு அறிக்கை சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த அறிக்கையை ரஜினிதரப்பே கசியவிட்டு ரியாக்‌ஷன் எதிர்பார்த்தது. அனைவரும் எதிர்பார்த்தபடியே ரஜினிகாந்த இந்த வலம் வந்த அறிக்கைக்கு ஒரு விளக்கம் கொடுத்தார். அதில் தமக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை ஒப்புக் கொண்டிருந்தார்.

எடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா? எடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா?

ரஜினியின் சூசக அறிவிப்பு

ரஜினியின் சூசக அறிவிப்பு

இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் முடிவை கைவிடுவதாக சூசகமாக அறிவித்தும் இருக்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியல் கட்சி தொடங்கி போட்டியிடுவது எல்லாம் சாத்தியமே இல்லை என்பதை ரஜினிகாந்த் நிரூபித்திருக்கிறார்.

இன்னமும் நம்பும் பாஜக

இன்னமும் நம்பும் பாஜக

ரஜினிகாந்தை முன் வைத்து திமுக- அதிமுக வாக்குகளுக்கு வேட்டு வைத்து அதாவது குட்டையை குழப்பி கரைசேரலாம் என இலவு காத்து கிடந்த பாஜகவுக்கு செம நோஸ்கட் ஆகிவிட்டது. கடந்த சில நாட்களாக மீடியாக்கள் வெளிச்சங்களில் ரொம்பவே மிதந்து கொண்டிருந்த பாஜகவுக்கு இப்போது பயங்கர அதிர்ச்சியாகிப் போய்விட்டது. இருந்தாலும் கூட எப்படியும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிடுவார் என்கிற ஏதோ ஒருவித நம்பிக்கையில் நப்பாசையுடன் இருக்கிறதாம் பாஜக.

திமுக முயற்சிக்கு வெற்றி

திமுக முயற்சிக்கு வெற்றி

இன்னொரு பக்கம் இந்த தேர்தலில் அரசியலுக்கு வந்துவிடாதீங்க.. என கெஞ்சாத குறையாக அமெரிக்கா வரை தூதர்களை ரெடி செய்தது திமுக. இதன் விளைவாகவும் கூட ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் ஜகா வாங்கியிருக்கலாம். இதனால் திமுக கேம்ப் படு மகிழ்ச்சியில் இருக்கிறது.

அதிமுகவின் மகிழ்ச்சி

அதிமுகவின் மகிழ்ச்சி

அதிமுகவைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் தரப்புடன் தொடர்ந்து நெருக்கமாகவே இருந்தது. வாய்ஸ் ஆப் ரஜினிகாந்த் நபர்களை எப்போதும் அதிமுக தலைமையிடத்தில் சிவப்பு கம்பள வரவேற்புதான். ரஜினியின் ஒவ்வொரு மூவ்களையும் விவாதித்து பரஸ்பரம் கருத்துகளை கூறிவந்தது. இருந்தாலும் திமுகவைப் போல சற்றே தங்களுக்கும் வாக்குகளை பிரிப்பாரோ என்கிற உதறல் இருப்பதையும் காட்டியது அதிமுக. இப்போது ரஜினிகாந்தின் அந்தர் பல்டியால் அதிமுகவும் அடேங்கப்பா மகிழ்ச்சியில் இருக்கிறதாம்.

கொஞ்சம் பீதிதானாம்

கொஞ்சம் பீதிதானாம்

இருந்தபோதும் திமுக- அதிமுக தலைமைகளுக்கு இன்னமும் பீதி இருக்கத்தான் செய்கிறதாம். பாஜகவினரோ வேறு சக்திகளோ ரஜினிகாந்துக்கு நெருக்கடி கொடுத்து கிடைத்த சொற்ப சந்தோசத்தையும் கெடுத்து வைத்துவிட்டால் என்னவாகும்? என்பதுதான் இந்த இருகட்சிகளின் பெருங்கவலையாம்.

English summary
Sources said that Tamilnadu BJP Upset over the Rajinikanth's statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X