சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்

Google Oneindia Tamil News

சென்னை: மதத்தை வைத்து அரசியல் செய்வது கடுமையாக கண்டிக்கத்தக்கது. டெல்லி வன்முறையை அடக்க முடியாவிட்டால் மத்திய அரசு பதவியை விட்டு போய் விட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக கூறியுள்ளார்.

Recommended Video

    டெல்லி கலவரம்.. அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு போய் விடுங்கள்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்

    டெல்லி கலவரத்தால் நாடே அதிர்ந்து போயுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று அடுத்தடுத்து வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றமும், டெல்லி உயர்நீதிமன்றமும் டெல்லி காவல்துறையை கடுமையாக சாடி வெளுத்தெடுத்து விட்டன.

    Rajinikanth strongly condemns delhi violence

    டெல்லி கலவரத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். கோர்ட்டுகளின் கடும் விளாசலைத் தொடர்ந்து தற்போது கலவரக்காரர்களை தேடி பிடித்து கைது செய்ய ஆரம்பித்துள்ளது டெல்லி போலீஸ்.

    இந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்புக்காக போயிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு சென்னை திரும்பினார். அவரிடம் செய்தியாளர்கள் டெல்லி கலவரம் தொடர்பாக சரமாரியான கேள்விகளைக் கேட்டனர். அப்போது ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். இதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். நான் முன்பே அதை்ததான் கூறியிருந்தேன். சிலபேர், சில கட்சிகள் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். இதை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் மிகவும் கஷ்டமாகிவிடும்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த சமயத்தில் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்துறை அமைச்சகம் தவறியுள்ளது. இது உளவுத்துறையின் தோல்வி, உள்துறையின் தோல்வி. சிஏஏ சட்டத்தால் இஸ்லாமிய சமூகத்தினர் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக குரல் கொடுக்கும் முதல் ஆளாக நாளாக இருப்பேன்.

    இதை சொல்வதால் உடனே என்னை பாஜக ஆள் என்று சொல்லாதீங்க.. ரஜினி வேதனைஇதை சொல்வதால் உடனே என்னை பாஜக ஆள் என்று சொல்லாதீங்க.. ரஜினி வேதனை

    என்ஆர்சி குறித்து மத்திய அரசு விளக்கி விட்டது. அதில் குழப்பமே இல்லை. ஆனால் மத்திய அரசு குடியுரிமை திருத்த சடத்தை திரும்ப பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதனால் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. இதைச் சொல்வதால் உடனே நான் பாஜகவுடைய ஆள் என்று சொல்லாதீர்கள்.

    என்னை பாஜக ஆள் என்று மூத்த பத்திரிக்கையாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறுவது வேதனை அடையச் செய்கிறது. நான் எனது மனதுக்கு பட்ட உண்மையைத்தான் சொல்கிறேன்.

    டெல்லி கலவரத்தை தடுப்பதில் மத்திய உள்துறை தோல்வி அடைந்துள்ளது. அமைதி வழியில் போராடலாம்.. அது வன்முறையாக மாற இடம் தரக் கூடாது. இப்போது டூமச்சாக போய் கொண்டிருக்கிறது, டெல்லி கலவரத்தை மத்திய அரசு அடக்க வேண்டும்.அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு விலக வேண்டியதுதான், அவ்வளவுதான்" இவ்வாறு கூறினார்.

    English summary
    Rajinikanth strongly condemns over delhi communal violence. he condemned for doing politics with religion
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X