சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம்மொழி மைய இயக்குநர் நியமனம்- ஆங்கிலத்தில் ரஜினி நன்றி கடிதம்- தமிழில் பதில் தந்த மத்திய அமைச்சர்

Google Oneindia Tamil News

சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநராக சந்திரசேகரனை நியமித்ததற்கு மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கடிதம் அனுப்பியுள்ளார்.

சென்னையை அடுத்த செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குநர் பதவி நீண்டகாலமாக நிரப்பப்படவில்லை. இது தொடர்பாக மத்திய அரசு மீது தமிழக கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

விஸ்வரூபம் எடுக்கும் மின் கட்டணம் விவகாரம்... மின்சார வாரியம் மீது தலைவர்கள் பாய்ச்சல் விஸ்வரூபம் எடுக்கும் மின் கட்டணம் விவகாரம்... மின்சார வாரியம் மீது தலைவர்கள் பாய்ச்சல்

ரமேஷ் பொக்ரியால் ட்விட்

லோக்சபாவிலும் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமது ட்விட்டர் பக்கத்தில், திரு ஆர். சந்திரசேகரன் அவர்கள் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குனராக பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

பொக்ரியால் ட்வீட்டில் ரஜினிகாந்த்

பொக்ரியால் ட்வீட்டில் ரஜினிகாந்த்

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குனராக உதவிப் பேராசிரியர் நிலையிலுள்ள ஒருவர் அயல்பணி முறையில் நியமிக்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல. இது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தமிழாராய்ச்சியை ஊக்குவிக்க எந்த வகையிலும் உதவாது! என விமர்சித்திருந்தார்.

ராமதாஸ் எதிர்ப்பு

ராமதாஸ் எதிர்ப்பு

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குனராக உதவிப் பேராசிரியர் நிலையிலுள்ள ஒருவர் அயல்பணி முறையில் நியமிக்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல. இது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தமிழாராய்ச்சியை ஊக்குவிக்க எந்த வகையிலும் உதவாது! என விமர்சித்திருந்தார்.

ரஜினிகாந்த் நன்றி

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், செம்மொழி தமிழாய்வு மையத்தின் இயக்குநராக சந்திரசேகரனை நியமித்துள்ளதற்கு நன்றி. தமிழை வளர்க்கும் மத்திய அரசின் முயற்சிக்கு நன்றி என கூறியுள்ளார். செம்மொழி தமிழாய்வு மைய இயக்குநர் நியமனம் குறித்து ஒரு பக்கம் விமர்சனங்கள் இருக்கும் போது ரஜினிகாந்த் இதை பாராட்டியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொக்ரியால் பதில்

பொக்ரியால் பதில்

நடிகர் ரஜினிகாந்தின் இந்த ஆங்கில கடிதத்துக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமிழில் பதில் அளித்துள்ளார். அதில், நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி (@narendramodi) அவர்களது திறமையான தலைமையில், நம் பாரத தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதி கொண்டிருக்கிறோம். #EKBharatShreshthaBharat என குறிப்பிட்டிருக்கிறார்.

English summary
Actor Rajinikanth thanks to Union minister Ramesh Pokhriyal Nishank for appointment of Chandrasekaran as the first director of Central Institute of Classical Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X