சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவுடன் கூட்டணி வைப்பாரா ரஜினி... திமுகவை நெருக்கடிக்குள்ளாக்குவாரா... என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் அதிமுக உடன் கூட்டணி அமைப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாஜக உடன் நெருக்கமாக இருக்கும் ரஜினி, தனி கட்சி ஆரம்பிக்க போவதால் அவர் அதிமுக மற்றும் பாஜக இடம் பெற்றுள்ள கூட்டணியில் இடம் பெறுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது,

1996ல் ரஜினிகாந்த் தனது முதல் அரசியல் பேச்சை பேசினார். அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவை எதிர்த்து பேசியதுடன் திமுக மற்றும் தமாகா கூட்டணிக்கு ஆதரவு அளித்தார். ஆனால் அரசியலில் இறங்கவில்லை.

அதன்பிறகு ஒவ்வொரு முறை சட்டசபை தேர்தல் வரும் போதும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு வரும். ஆனால் அவர் அரசியல் குறித்து ஒரு முறை கூட அறிவிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்கு பிறகு ரஜினி காந்த் முதல்முறையாக கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியல் குறீத்து பேசினார்.

என்ன இப்படி சொல்லிவிட்டார் ரஜினி.. சுற்றுப்பயணம் இல்லையாமே.. பின்னணி என்ன! என்ன இப்படி சொல்லிவிட்டார் ரஜினி.. சுற்றுப்பயணம் இல்லையாமே.. பின்னணி என்ன!

ரஜினி அறிவிப்பு

ரஜினி அறிவிப்பு

நிச்சயம் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன், இப்ப இல்லேன்னா எப்பவும் இல்ல, 'மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்', 'தமிழகத்தில் ஊழலற்ற ஜாதி, மதசார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் என்று கூறினார். ரஜினி கூறியபடி 3 வருடங்களுக்கு பிறகு 2020 டிசம்பரில் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும், டிசம்பர் 31ம் தேதி இதுபற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

கூட்டணி

கூட்டணி

ரஜினிகாந்த் அறிவிப்பு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆரம்பம் முதலே ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்தது. ரஜினியின் அறிவிப்பு பாஜகவிற்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. எனினும் ரஜினிகாந்த், பாஜக இடம் பெற்றுள்ள அதிமுக உடன் கூட்டணி வைப்பாரா என்ற கேள்வி எழுகிறது.

அதிக சீட் கேட்பார்

அதிக சீட் கேட்பார்

ஒருவேளை ரஜினி அதிமுக உடன் கூட்டணி வைத்தால், அவருக்கு எத்னை தொகுதிகளை அதிமுகவால் கொடுக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக இடம் பெற்றுள்ளன. இதில் மற்ற எல்லா கட்சியையையும் விட அதிக சீட்டுகளை ரஜினி கேட்கவும் வாய்ப்பு உள்ளது.

அதிமுக விருப்பம்

அதிமுக விருப்பம்

இன்னொரு பக்கம் முதல்வராக ரஜினி வர வேண்டும் என்று விரும்பும் ரசிகர்களுக்கு, அதிமுக கூட்டணியில் ரஜினி கட்சி ஆரம்பித்து இடம் பெற்றால் ஏமாற்றத்தையே தரும். ஆனால் அதேநேரம் அதிமுக உடன் ரஜினி கூட்டணி அமைத்தால் துணை முதல்வர் பதவியை அதிமுக தர வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்த முறை அதிமுக வலிமையாக தேர்தலை சந்திக்க விரும்புகிறது. அதற்காக ரஜினியை கூட்டணியில் சேர்த்து துணை முதல்வர் பதவி கொடுத்தாலும் ஆச்சர்யம் இல்லை.

அமித்ஷா ஆலோசனை

அமித்ஷா ஆலோசனை

ஏற்கனவே பாஜவின் தீவிர ஆதரவாளரான துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ரஜினியின் அரசியல் வருகையை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். இப்போது ரஜினி அரசியல் வருகை உறுதியாகி உள்ளதால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஏற்கனவே குருமூர்த்தி ரஜினியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அத்துடன் அண்மையில் அமித்ஷாவையும் சென்னையில் சந்தித்து குருமூர்த்தி ஆலோசனை நடத்தினார். அப்போது ரஜினி அரசியல் வருகை குறித்து இருவரும் பேசிஇருக்க வாய்ப்பு உள்ளது. ரஜினிக்கு முழு ஆதரவை அமித்ஷா அப்போது தெரிவித்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.

கூட்டணி அமைப்பாரா

கூட்டணி அமைப்பாரா

ரஜினி அரசியல் வருகை மற்றும் அவரது தனிக்கட்சி அறிவிப்பு என்பது அதிமுக பாஜக கூட்டணிக்கு கூடுதல் பலத்தை நிச்சயம் தரும். கூட்டணியை அமைத்தால் பெரிய பலத்தை கொடுக்கும். மாறாக அவர் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டால் ஓட்டுக்கள் பிரியும். அப்போதும் அது அதிமுக கூட்டணிக்கே சாதகமாக இருக்கும். எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
There is an expectation that Rajinikanth will form an alliance with the AIADMK. Rajini, who is close to the BJP, is expected to join the BJP-AIADMK-led National Democratic Alliance as he is about to start a separate party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X