சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல் கட்சி தொடங்கும் முடிவையே கைவிடுகிறாரா ரஜினிகாந்த்? எந்த நேரத்திலும் வெளியாகும் அறிக்கை?

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் கட்சியை தொடங்கும் முடிவையே நடிகர் ரஜினிகாந்த் கைவிட இருப்பதாகவும் இது தொடர்பான அறிக்கையும் தயாராகிவிட்டது; எந்த நேரத்திலும் வெளியாகக் கூடும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்தார். ஆனால் ரஜினிகாந்த் பகிரங்கமாக அறிவித்தும் ஆண்டுகள் பல ஓடியதுதான் மிச்சம். அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்குவதற்கான எந்த சமிக்ஞையுமே இல்லை.

ரஜினிகாந்த் இந்த தேர்தலுக்கு மட்டும் வர வேண்டாம்.. போயஸைத் தொடர்பு கொண்ட இருவர்.. திடீர் பரபரப்பு! ரஜினிகாந்த் இந்த தேர்தலுக்கு மட்டும் வர வேண்டாம்.. போயஸைத் தொடர்பு கொண்ட இருவர்.. திடீர் பரபரப்பு!

ரஜினிக்கு நெருக்கடி?

ரஜினிக்கு நெருக்கடி?

ரஜினிகாந்தைப் பொறுத்தவரை 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக அரசியலுக்கு வருவார் என்கிற பிம்பத்தை சுமந்து வருகிறார். இதனை சில ஆண்டுகளுக்கு முன் அவரே வெளிப்படையாக அறிவித்தார். ஆனாலும் இந்த அறிவிப்பு கூட கடுமையான நெருக்கடிகளால்தான் வெளியிடப்பட்டது என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரிந்த கதை.

என்ன பேசினாலும் சர்ச்சை

என்ன பேசினாலும் சர்ச்சை

அவ்வப்போது ரஜினிகாந்த் அபூர்வமாக தெரிவித்த கருத்துகள் அனைத்துமே சர்ச்சையாகிப் போனது. ஒருகட்டத்தில் ரஜினிகாந்த் அப்படியே கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்தாலும் தான் முதல்வராகப் போவதில்லை எனவும் அறிவித்தார். அந்த அறிவிப்பிலேயே ரஜினிகாந்த் ஜகாவாங்கிவிட்டார் என்றே சொல்லப்பட்டது.

ரஜினியை வைத்து காய்நகர்த்தல்கள்

ரஜினியை வைத்து காய்நகர்த்தல்கள்

இதனைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ரஜினிகாந்த் எந்த சூழ்நிலையிலும் வந்துவிடவே கூடாது என்பதில் திமுக படுதீவிரமாக காய்களை நகர்த்தியது. ஆனால் டெல்லியோ எப்படியாவது ரஜினியை களத்தில் இறக்கிவிட்டு வேடிக்கை பார்ப்பது என முடிவோடு இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஓய்ந்தபாடில்லை.

அரசியலுக்கு குட்பை சொல்லும் ரஜினிகாந்த்?

அரசியலுக்கு குட்பை சொல்லும் ரஜினிகாந்த்?

ஆகையால் கொரோனா பாதிப்பை முன்வைத்து ரஜினிகாந்த் கட்சியை தொடங்கும் முடிவை கைவிடுவார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை ரஜினிகாந்த் தரப்பு தயாரித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் ரஜினிகாந்தின் அரசியலுக்கு குட்பை அறிக்கை வெளியாகக் கூடும் என்றே கூறப்படுகிறது.

English summary
Sources said that Actor Rajinikanth may announce on Not launch Political Party for TN Assembly Election 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X