சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித்ஷாவும் போயாச்சு-வராமலேயே "அரசியலுக்கு முழுக்கு" என அறிவித்து "ரெஸ்ட்"டுக்குத் தயாராகும் ரஜினி!

Google Oneindia Tamil News

சென்னை: அரசியலுக்கு வராமலே முழுக்கு போடப் போகும் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் எந்த நேரத்திலும் வெளியிடப் போகிறாராம்.

Recommended Video

    அரசியலுக்கு வராமலேயே மொத்தமாக ஓய்வை அறிவிக்க போகும் Rajinikanth? | Oneindia Tamil

    தமிழகத்தில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என பேசப்பட்டு எழுதப்பட்டு வந்தது. ஆனால் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய ஆளுமைகள் உலவிய காலத்தில் அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்கவில்லை.

    ஜெயலலிதாவும் கருணாநிதியும் காலமான நிலையில் யாரோ பிடித்து தள்ளிவிட்டது போல அரசியலுக்கு வரப் போகிறேன் என அறிவித்தார். தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருச்சு.. அதை நிரப்ப போகிறேன்... எம்ஜிஆர் மாதிரி ஆட்சி தருவேன் என்றெல்லாம் டமாரம் அடித்தார் ரஜினிகாந்த்.

    ரஜினி, சசிகலா விவகாரங்களில் நினைத்தது நடக்கலை..கேட்ட தொகுதிகளாவது அதிமுக தருமா? பாஜக பரிதவிப்பு ரஜினி, சசிகலா விவகாரங்களில் நினைத்தது நடக்கலை..கேட்ட தொகுதிகளாவது அதிமுக தருமா? பாஜக பரிதவிப்பு

    ரஜினியும் சர்ச்சையும்

    ரஜினியும் சர்ச்சையும்

    அதே வேகத்தில் ரஜினிகாந்த் சில பிரச்சனைகள் கருத்துகளை உதிர்த்தார். சிலவற்றில் கனத்த மவுனம் காத்தார். ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகிப் போக அதற்கு விளக்கம் தருவதற்கு என மீண்டும் வீட்டு வாசலில் பத்திரிகையாளர்களை காக்க வைத்தார்.

    நடுத்தெருவில் பத்திரிகையாளர்கள்

    நடுத்தெருவில் பத்திரிகையாளர்கள்

    தமிழகத்தில் வீட்டுக்குள் விடாமல் நடுத்தெருவில் நின்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஒரே பிரமுகராக ரஜினிகாந்த் இருந்தார். ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருவார்; அவர் எப்படியும் முதல்வராகிவிடுவார் என பலரும் கனவு கொண்டிருந்த நிலையில் நான் முதல்வர் இல்லை; கட்சி வேற- ஆட்சி வேற என டயலாக் அடித்தார்.

    கொரோனாவால் குட்பை

    கொரோனாவால் குட்பை

    அப்பவே புரிந்துவிட்டது ரஜினிகாந்த் ஜகாவாங்கப் போகிறார் என்பது. பின்னர் கொரோனாவும் வந்தது. வந்த கொரோனா போகிற மாதிரியும் தெரியவில்லை. இதனை சாக்காக வைத்து ஒரே அடியாக அரசியலுக்கு வரப்போவதில்லை என சூசகமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டார் ரஜினிகாந்த்.

    அமித்ஷா வருகை

    அமித்ஷா வருகை

    பின்னர் அமித்ஷாவின் சென்னை வருகையில் ரஜினிகாந்தும் இணைத்து பேசப்பட்டார். ஆனால் அரசியலுக்கு வரப் போவதில்லை என்கிற முடிவில் இருக்கும் ரஜினிகாந்தை பார்த்து என்ன பிரயோஜனம் என நடையை கட்டிவிட்டார் அமித்ஷா ஜி. இப்போது ரஜினிகாந்துக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாகவும் அறிவித்துவிட்டார்கள்.

    ரஜினிகாந்த் அறிவிப்பு?

    ரஜினிகாந்த் அறிவிப்பு?

    இதனால் நிம்மதி பெருமூச்சுவிட்டிருக்கும் ரஜினிகாந்த், அரசியலுக்குள் நுழையாமலே அரசியலுக்கு முழுக்கு போடப் போகும் அறிவிப்பை எந்த நிமிடத்திலும் வெளியிடக் கூடுமாம். அப்படி அறிவிப்பை வெளியிட்டுவிட்டு நல்லா ஓய்வெடுக்கப் போகும் திட்டத்திலும் இருக்கிறாராம் ரஜினிகாந்த்.

    English summary
    Actor Rajinikanth will announce on not to enter of Politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X