சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒருபக்கம் ரஜினி.. இன்னொருபக்கம் அழகிரி, பாமக, அதிமுக.. திமுகவிற்கு எதிராக வகுக்கப்படும் சக்ர வியூகம்

Google Oneindia Tamil News

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ரஜினிகாந்தின் அரசியல் வருகை திமுகவிற்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்க போகிறது.

தமிழகத்தின் 2021 சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. பக்கா திட்டத்தோடு, மாநிலம் முழுக்க ஒவ்வொரு தேதியிலும் பிரச்சாரம் செய்ய திமுக சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது.

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் திமுக சார்பாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ரஜினிகாந்தின் அரசியல் வருகை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அறிவிப்பு

அறிவிப்பு

கடந்த 10 வருடமாக திமுக ஆட்சியில் இல்லை. திமுகவின் தொண்டர்கள் இப்பொதே துவண்டு போய் உள்ளனர். திமுகவின் தலைவர் கருணாநிதி மறைவிற்கு பின் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவில்லை என்றால் திமுகவின் எதிர்காலமும்,வாக்கு வங்கியும் பெரிய அளவில் அடி வாங்கும்.

முக்கியம்

முக்கியம்

இதனால் இந்த தேர்தலில் வெற்றியை தவிர வேறு எந்த முடிவையும் பார்க்க கூடாது என்று திமுக உறுதியாக உள்ளது. இதற்காகவே பிரஷாந்த் கிஷோர் போன்ற அரசியல் ஆலோசகர்களை கூட திமுக அழைத்து வந்து வேலை செய்து கொண்டு இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் திமுகவிற்கு எதிராக பெரிய படையே நான்கு பக்கமும் திரண்டு வந்துள்ளது.

படை திரண்டு

படை திரண்டு

ஒரு பக்கம் லோக்சபா தேர்தலில் இருந்ததை விட வலிமையாக அதிமுக உருவெடுத்து உள்ளது.முதல்வர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து அதிமுக அதிரடியாக தேர்தலை எதிர்கொள்கிறது. அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இட ஒதுக்கீடு தொடங்கி பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அடுத்தடுத்து அறிவித்து திமுகவிற்கு எதிராக பெரிய அளவில் ஸ்கோர் செய்துவிட்டது.

பாஜக

பாஜக

இன்னொரு பக்கம் பாஜக வேல் யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறது . வேல் யாத்திரை மாஸ் வெற்றிபெறவில்லை என்றாலும் உள்ளூரில் பாஜக இதன் மூலம் அடித்தளம் அமைத்து உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக பாஜக வளர்வதற்கு இந்த யாத்திரை அடித்தளம் அமைந்து உள்ளது. இந்த நிலையில் பாமகவும் தேர்தல் அதிரடிக்கு தயார் ஆகிவிட்டது.

திமுக

திமுக

லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு சென்ற வன்னியர் வாக்குகளை மீண்டும் கைப்பற்றும் பொருட்டு 20% இடஒதுக்கீடு கோரி பாமக இப்போதே போராட்டத்தில் இறங்கிவிட்டது.வன்னியர்களின் பிரதிநிதிகள் நாங்கள்தான் என்று கூறி திமுகவிற்கு செல்லும் வன்னியர்களின் வாக்குகளை கைப்பற்ற பாமக திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பாமக, அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்கும் என்பது வேறு கதை.

 ரஜினி

ரஜினி

திமுகவிற்கு இப்படி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் மூலம் மூன்று பக்கமும் சிக்கல் உருவாகி உள்ள நிலையில் தற்போது நான்காவதாக ரஜினிகாந்தும் கட்சி தொடங்குகிறேன் என்று அறிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் யாருடன் கூட்டணி வைப்பார், கொள்கை என்ன, தேர்தலில் எப்படி போட்டியிடுவார் என்பதெல்லாம் இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் பாஜக நிர்வாகி அர்ஜுன் மூர்த்தியை இவர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஜினி திமுக

ரஜினி திமுக

இதனால ரஜினி - அதிமுக - பாஜக கூட்டணி உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. ரஜினியின் வருகை கண்டிப்பாக திமுகவிற்கு எதிராக திரும்ப அதிக வாய்ப்புகள் உள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். இது போக சட்டசபை தேர்தலில் என்னுடைய பங்கு இருக்கும் என்று அழகிரியும் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் நண்பர்

ரஜினியின் நண்பர்

ரஜினிக்கு நெருக்கமான அழகிரி, ரஜினியின் கட்சியிலேயே சென்று சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை . திமுக நிர்வாகிகள் சிலர் கூட கட்சி மாற வாய்ப்புகள் உள்ளது. தேர்தலுக்கு முன் இதனால் பல அதிரடிகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்கிறார்கள். இதனால் தேர்தலுக்கு முன்பாகவே திமுகவிற்கு நினைத்து பார்க்க முடியாத சவால்கள் உருவாகி உள்ளது.

English summary
Rajinikanth to Azhagiri: DMK has to face many hurdles in the path to rule in 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X