சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டின் அமைதியை நிலைநாட்ட என்னதான் செய்வார் ரஜினி.. பட்டியலிட்டாலே தலைசுத்துதே!

Google Oneindia Tamil News

சென்னை: நாட்டின் அமைதியை நிலை நாட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் என ரஜினி கூறியுள்ளாரே அப்படி என்னதான் செய்வார் என்ற கேள்வி எழுகிறது.

Recommended Video

    Rajinikanth Tweets that he is ready to play any roll to maintain peace in country

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி, மேகாலயா உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அது போல் சென்னை வண்ணாரப்பேட்டையிலும் போராட்டம் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து அண்மையில் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை என்றும் தெரிவித்தார்.

    ரஜினி

    ரஜினி

    போராட்டங்களில் வன்முறை இருக்கக் கூடாது. டெல்லி போராட்டத்தை ஒடுக்க முடியாவிட்டால் பதவி விலகுங்கள் என ஆவேசமாக தெரிவித்தார். இந்த கருத்தை பெரும்பாலானோர் ஆதரித்தனர். எனினும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ரஜினிக்கு இன்னும் புரிதல் வேண்டும் என தெரிவித்தனர். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்தை தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் சந்தித்து பேசினார். இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

    அமைதி

    அமைதி

    இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் கூறுகையில் இன்று தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து அவர்கள் தரப்பு ஆலோசனைகளைக் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார் ரஜினி.

    என்ன செய்வார்

    நாட்டின் அமைதியை நிலைநாட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் என ரஜினி தெரிவித்துள்ள நிலையில் அவர் என்னதான் செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஜினிக்கு தற்போது இருக்கும் ஆப்ஷன்கள் இரண்டுதான். ஒன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது. இல்லாவிட்டால் குடியுரிமை திருத்த சட்ட பட்டியலில் முஸ்லீம்களையும் இலங்கையையும் இணைக்கக் கோருவது.

    ரஜினி

    ரஜினி

    இதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எனவே போராடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என ரஜினி ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். இதனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மேலும் சில திருத்தங்களை செய்யுமாறு ரஜினி கோரலாம். இன்னொன்று போராட்டக்காரர்களிடம் களத்துக்கே சென்று பேச்சுவார்த்தை நடத்துவது. அவ்வாறு அவர் பேச்சுவார்த்தை நடத்தினால் டெல்லி, மேகாலயா, தமிழகத்தில் சென்னை, இன்னும் எங்கெல்லாம் போராட்டம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    சென்னை

    சென்னை

    இது சாத்தியமில்லை. ஒரு வேளை சென்னையில் மட்டும் வண்ணாரப்பேட்டையில் அவர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்வாரேயானால் அது அடுத்த ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு அவர் நடத்தியதாக விமர்சனங்கள் எழும். பிற போராடுவதையே விரும்பாத ரஜினி இந்த சட்டத்தை எதிர்த்து அவர் போராட்டத்தில் ஈடுபடுவார் என்பதற்கு வாய்ப்பே இல்லை. இல்லை முஸ்லீம்களின் வாக்குகளை குறிவைத்து அவர்களை சமாதானம் செய்ய சும்மா பேச்சுக்கு அப்படி கூறினாரா என்றும் தெரியவில்லை. அமைதியை நிலைநாட்ட அப்படி என்னதான் செய்வார் ரஜினி என்பதை நினைத்தாலே தலை சுற்றுகிறது. எது எப்படியோ அவரது செயல்பாடு குறித்து அவராக விளக்கும் வரை இது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும்.

    English summary
    Rajinikanth tweet that to maintain peace he is ready to do anything always. Yesterday he meet Muslim organisation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X