சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஏமாற்றம் அடைந்து விட்டேன்".. என்னதான் சொல்ல வருகிறார் ரஜினி.. செம்ம காமெடியா இருக்கே!

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தமக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் ஏற்பட்டுவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் பகிரங்கமாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    மீண்டும் மீண்டும் கேட்ட செய்தியாளர்கள்.. அதே வார்த்தையை சொல்லி தப்பித்த ரஜினி.. - வீடியோ

    தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்து இரண்டாடுகள் ஓடிவிட்டன. ஆனால் அரசியல் கட்சியை ரஜினிகாந்த் தொடங்கவே இல்லை.

    இதேபோல் கடந்த ஆண்டு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். அதன்பின்னர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தாமல் ரஜினிகாந்த் சினிமாவில் பிஸியாக இருந்து வந்தார். ஆனால் ரஜினியின் ஆலோசகர்களாக கூறிக் கொள்ளும் தமிழருவி மணியன், கராத்தே தியாகராஜன் போன்றோர் ரஜினிகாந்த் கட்சியை தொடங்குவார் என்று பல முறை கூறிக் கொண்டே இருக்கின்றனர். இதில் தமிழருவி மணியனோ, ரஜினிகாந்த் கட்சியின் கூட்டணி கட்சிகள் பற்றி பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பினார்.

    ரஜினி அரசியலுக்கு வருவாரா? வந்தாலும் ஜெயிப்பாரா? - எண் கணித நிபுணரின் அடடே கணிப்பு ரஜினி அரசியலுக்கு வருவாரா? வந்தாலும் ஜெயிப்பாரா? - எண் கணித நிபுணரின் அடடே கணிப்பு

    மீண்டும் செய்தியாளர் சந்திப்பு

    மீண்டும் செய்தியாளர் சந்திப்பு

    இந்த நிலையில் சென்னையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பிற்பகல் வரை நடைபெற்ற இக்கூட்டத்துக்குப் பின்னர் வழக்கம் போல சென்னை போயஸ் கார்டனில் நடுத்தெருவில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். ராகவேந்திரா மண்டபத்தில் செய்தியாளர்களை சந்திக்க ரஜினிகாந்த் விரும்பவில்லை.

    மீண்டும் செய்தியாளர் சந்திப்பு

    மீண்டும் செய்தியாளர் சந்திப்பு

    இந்த நிலையில் சென்னையில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பிற்பகல் வரை நடைபெற்ற இக்கூட்டத்துக்குப் பின்னர் வழக்கம் போல சென்னை போயஸ் கார்டனில் நடுத்தெருவில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். ராகவேந்திரா மண்டபத்தில் செய்தியாளர்களை சந்திக்க ரஜினிகாந்த் விரும்பவில்லை.

    கூட்டத்தில் ஏமாற்றம்

    கூட்டத்தில் ஏமாற்றம்

    இச்சந்திப்பின் தொடக்கத்திலேயே, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமக்கு தனிப்பட்ட முறையில் ஒரு விஷயம் ஏமாற்றம் தந்ததாகவும் அது குறித்து பின்னர் தெரிவிப்பதாகவும் ரஜினிகாந்த் போட்டுடைத்தார். ஆனால் எந்த விஷயத்தில் ஏமாற்றம் என்பதை தெரிவிக்காமலேயே ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு வழக்கம் போல வீட்டுக்குள் நடையை கட்டிவிட்டார்.

    ரஜினிக்கு எது ஏமாற்றம்?

    ரஜினிக்கு எது ஏமாற்றம்?

    ரஜினிகாந்துக்கு ஏமாற்றம் தந்தது எது? என்பதுதான் இப்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது. ரஜினிகாந்த் கட்சியை தொடங்குவேன் என அறிவித்துவிட்டு அதை நடைமுறைப்படுத்தாமலேயே இருப்பதாக மாவட்ட செயலாளர்கள் அதிருப்தி தெரிவித்தனரா? அல்லது தமிழகத்தில் பாஜகவின் முகமாக மட்டுமே செயல்படுவதில் ரஜினிகாந்த் முனைப்பாக இருப்பதில் மாவட்ட செயலாளர்கள் சுட்டிக்காட்டினார்களா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    எல்லாமே பேசட்டும் என நடிப்பா?

    எல்லாமே பேசட்டும் என நடிப்பா?

    ஆனால் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த ரஜினிகாந்த், கட்சி தொடங்குவதற்கு முன்னரே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏமாற்றம் என அறிவித்திருப்பது நகைப்புக்குரியதாகவே பார்க்கப்படுகிறது. மக்கள் மன்றம் என்கிற அரசியலுக்கு முந்தைய கட்டத்தில் நடத்தப்படுகிற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலேயே அதிருப்தி என பகிரங்கமாக வெளிப்படையாக ரஜினிகாந்த் புலம்புவதைப் பார்த்தால் இவர் கட்சி தொடங்கு தாக்குப் பிடிப்பாரா? என்கிற கேள்வியையும் இயல்பாகவே எழுப்புகிறது. அல்லது எல்லோரும் தம்மை பற்றி பேச வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு கருத்தை உதிர்த்தாரா ரஜினி? என்கிற கேள்வியும் எழுகிறது.

    English summary
    Actor Rajinikanth has said that he was very upset over his Makkal Mandram's today meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X