சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மு.க.ஸ்டாலினிடம் ரூ. 50 லட்சம் கொரோனா நிதி கொடுத்த ரஜினிகாந்த் - அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுகோள்

நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதி ரூ. 50 லட்சம் நிதி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் மு.க ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளார். கொரோனாவை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Recommended Video

    கொரோனா நிவாரண நிதி வழங்கிய Thalaivar Rajinikanth| MK Stalin, Rajinikanth

    நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 35 ஆயிரம் பேராக அதிகரித்துள்ளது. 350 பேர் வரை தினசரியும் மரணமடைந்து வருகின்றனர். தமிழகத்தில் 2 வாரங்கள் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக மக்கள் நிதி உதவி தரலாம் என முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

    பதைபதைப்பான இரண்டரை மணிநேரம்.. மதுரைக்கு நள்ளிரவில் ஆக்சிஜன் வந்தது எப்படி?.. சு.வெங்கடேசன் டிவிட்! பதைபதைப்பான இரண்டரை மணிநேரம்.. மதுரைக்கு நள்ளிரவில் ஆக்சிஜன் வந்தது எப்படி?.. சு.வெங்கடேசன் டிவிட்!

    கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதை வென்று மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகம் இப்போது மிக முக்கியமான 2 நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. ஒன்று இப்போது கொரோனா என்கிற நோய்த்தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடி. இன்னொன்று
    நிதி நெருக்கடி. இந்த இரண்டையும் சமாளிப்பதற்கான முன் முயற்சிகளை தமிழக அரசு முழுமையாக செய்துகொண்டுவருகிறது.

     கொரோனா நிவாரண நிதி

    கொரோனா நிவாரண நிதி

    கொரோனா என்கிற பெருந்தொற்றை கட்டுப்படுத்தவும் பரவாமல் தடுக்கவும் தொற்றுக்குள்ளானவர்களை காக்கும் பணிகளில் கண்ணுங்கருத்துமாக தமிழக அரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வருகிறது. கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்தில் இப்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியை அரசு வழங்கி வருகிறது.

     தாராள நிதி உதவி வழங்குவீர்

    தாராள நிதி உதவி வழங்குவீர்

    கொரோனாவின் வீரியத்தை உணர்ந்து மருத்துவமனைகள், மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள், தடுப்பூசிகள், ஆகிய உள்கட்டமைப்பை இன்னும் அதிகப்படுத்தியாக வேண்டும். கூடுதல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை பணியாளர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திடீர் அவசர செலவினங்களுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குவீர் என்று முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார்.

     நிவாரண நிதி குவிகிறது

    நிவாரண நிதி குவிகிறது

    இதனையடுத்து நடிகர் சூர்யா, சிவக்குமார், கார்த்தி ஆகியோர் ஒரு கோடி ரூபாய் நிதி அளித்தனர். அவர்களைத் தொடர்ந்து திரை உலக பிரபலங்களும், தொழில் அதிபர்களும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி அளித்து வருகின்றனர். சாதாராண தொழிலாளர்கள், சிறுவர் சிறுமியர்களும் கூட உண்டியல் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர்.

     ரூ. 50 லட்சம் நிவாரண நிதி

    ரூ. 50 லட்சம் நிவாரண நிதி

    இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதி வழங்கினார். கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி வழங்கியுள்ளார் ரஜினிகாந்த்.

     ரஜினிகாந்த் பேட்டி

    ரஜினிகாந்த் பேட்டி

    செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த். கொரோனாவை தடுக்க அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. கொரோனாவை தடுக்க அனைவரும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசின் நடவடிக்கைகளையும் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

    English summary
    Actor Rajinikanth met Chief Minister MK Stalin at the General Secretariat today and handed over the Corona relief fund. He also stressed that the people must cooperate to eradicate the corona.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X