சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாம் ரஜினிகாந்த் பிளான்.. 'முதல்வன்' பாணி அரசியல்.. பாய ரெடியாகும் 'முரட்டுக்காளை'! ரசிகர்கள் செம

Google Oneindia Tamil News

சென்னை: 'முதல்வன்' திரைப்பட பாணியில் ரஜினிகாந்த் அதிரடி முடிவை எடுப்பார் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருவது, புது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி ரசிகர்கள் இவ்வாறு திடீரென கூற காரணம் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவுதான்.

ரஜினிகாந்த் உடல்நிலை இருக்கும் நிலையில், கொரோனா காலத்தில் மக்களை சந்திக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதை நேற்று டுவிட்டரில் உறுதி செய்த ரஜினிகாந்த், தனது நிலைப்பாடு பற்றி மக்கள் மன்றத்தினருடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பதாக அறிவித்தார்.

அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு.. இப்படியே வேணும் நீங்க எங்களுக்கு.. ப்ளீஸ்!அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு.. இப்படியே வேணும் நீங்க எங்களுக்கு.. ப்ளீஸ்!

ரஜினி வியூகம்

ரஜினி வியூகம்

ரஜினிகாந்த் இனிமேல் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதற்கான மறைமுக அறிவிப்பாக இது பார்க்கப்பட்டது. பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கருத்து இதுவாகத் தான் இருக்கிறது. ஆனால் ரஜினி ரசிகர்களில் ஒரு பகுதியினர் இதை ஒரு வியூகம் என்று பார்க்கிறார்கள்.

முதல்வன் பட பாணி

முதல்வன் பட பாணி

ஷங்கர் இயக்கிய 'முதல்வன்' திரைப்படத்தில் ஹீரோ அர்ஜுன் கதாபாத்திரம் அரசியலுக்கு வருவதற்கு மிகுந்த யோசனையில் இருக்கும். மறுப்பும் தெரிவிக்கும். அப்போது அவர் மீட்டு முன்பாக ஆதரவாளர்கள் திரண்டு வந்து அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்வார்கள். ஏழை, எளியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என பலரும் அர்ஜுன் மனம் மாறும் அளவுக்கு பேசுவார்கள். இதையடுத்து அர்ஜுன் ஒருகையை உயர்த்தி அரசியலுக்கு வருவதை அறிவித்ததும் படத்தின் கதாபாத்திரங்கள் மட்டுமின்றி, படத்தை பார்க்கும் ரசிகர்களும் அப்படி ஒரு எழுச்சியான மனநிலையை உணர்வார்கள்.

ரஜினி வீட்டு முன்பு குவியும் ரசிகர்கள்

ரஜினி வீட்டு முன்பு குவியும் ரசிகர்கள்

ரஜினிகாந்தும் இப்போது அப்படித்தான் செய்யப்போகிறார் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சொல்லி வருகிறார்கள். அவர் வீட்டு முன்பாக ரசிகர்கள் குவிந்து வருவதற்கான காரணமும் இதுதான் என்கிறார்கள். உடல்நிலை சரியில்லாத ஒருவர், மக்களுக்காக அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பெயர் மக்கள் மனதில் தங்கிவிடும். இன்னும் தமிழக சட்டசபை தேர்தலுக்கு குறுகிய காலம்தான் இருப்பதால் இதுபோன்ற ஒரு அதிரடி எளிதாக ரஜினியை மக்கள் மத்தியில், அதிலும் பெண்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்த்துவிடும். இது வாக்குகளாக அறுவடையாகும். எனவே இது ஒரு வியூகம் என்று அவர்கள் பெருமிதம் தெரிவிப்பதை பார்க்க முடிகிறது.

பெருமிதம் பேச வசதி

பெருமிதம் பேச வசதி

ஒருவேளை ரசிகர்கள் கூறுவது போல, இது ஒரு வியூகமாக இருந்தால், உடல்நிலை சரியில்லை என்று மருத்துவர்கள் எச்சரித்த பிறகும், மக்களுக்காக ஒருவர் அரசியல் களத்துக்கு வருகிறார் என்றால், அவர்தான் உண்மையான தலைவர் என்று போஸ்டர் அடித்து ஒட்டுவதற்கும், சமூக வலைத்தளங்களில் சொல்வதற்கும் அது வசதியாக இருக்கும் என்பது என்னவோ உண்மைதான்.

ரஜினிக்கு எதிராக போய்விடும்

ரஜினிக்கு எதிராக போய்விடும்

அதேநேரம் அரசியல் பார்வையாளர்களோ, இது ரசிகர்கள் தங்களுக்கு தாங்களே மனதை தேற்றிக்கொள்ள சொல்லும் வார்த்தைகள் என்கிறார்கள். உடல்நிலை சரியில்லை என்று ஒப்புக்கொண்டு அரசியலுக்கு வருவது ரஜினிகாந்துக்கு பலமாக இருக்காது, உடல்நிலை சரியில்லாத மனிதர் ஓய்வெடுக்கட்டும் என்று தான் மக்கள் நினைப்பார்கள். இது பாதகமான வியூகமாகத்தான் போய் முடியும். ஒருவேளை இது வியூகமாக இருந்தாலும் கூட, அது ரஜினி தரப்புக்கு எதிராக போய்விடும் அபாயம் தான் இருக்கிறது என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

அட ஒன்னும் இல்லைப்பா

அட ஒன்னும் இல்லைப்பா

சிலரோ இதில் வியூகமும் இல்லை, ஒன்றும் இல்லை. ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதன் வெளிப்பாடுதான் அவரது டுவிட்டர் பதிவு. ரசிகர்கள் மனதை தேடுவதற்காக இப்போதைக்கு அரசியல் பற்றி யோசிப்பதாக கூறியிருக்கிறார். இன்னும் சில நாட்களில் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை அறிவித்து விடுவார் என்று அடித்துச் சொல்கிறார்கள். பார்ப்போம்.. முதல்வன் வியூகம் நடக்கிறதா, அல்லது சினிமாவில் நடித்து ரஜினி கலைப் பயணத்தைத் தொடங்கப்போகிறாரா என்பது சில நாட்களில் தெரிந்துவிடத்தானே போகிறது.

English summary
Rajinikanth fans, believe he will come to politics like Arjun character did in Mudhalvan film. The fans says Rajinikanth latest tweet is a political plan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X