சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினி தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறார்.. விரைவில் கோர்ட் படியேறுவார்.. கி. வீரமணி எச்சரிக்கை!

ரஜினி தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறார், அவர் விரைவில் நீதிமன்ற படியேற வேண்டி இருக்கும் என்று திராவிட கழக தலைவர் கி. வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி

    சென்னை: ரஜினி தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறார், அவர் விரைவில் நீதிமன்ற படியேற வேண்டி இருக்கும் என்று திராவிட கழக தலைவர் கி. வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம் துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. ராமருக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இதில் ராமருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. சீதை புகைப்படம் எடுத்து செல்லப்பட்டது .சோ மட்டும்தான் இதை தைரியமாக துக்ளக்கில் எழுதினார், என்று ரஜினி குறிப்பிட்டார்.

    அவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தற்போது நடிகர் ரஜினி காந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில், பெரியார் பற்றி நான் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். சாரி. பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது, என்றுள்ளார்.

    ரஜினி கட்சி ஆரம்பிக்க ரெடி ஆகிட்டாரு.. உஷாரு.. தேசிய அளவில் வைரலான #மன்னிப்பு_கேட்க_முடியாது!ரஜினி கட்சி ஆரம்பிக்க ரெடி ஆகிட்டாரு.. உஷாரு.. தேசிய அளவில் வைரலான #மன்னிப்பு_கேட்க_முடியாது!

    பதிலடி

    பதிலடி

    ரஜினியின் இந்த பேச்சு குறித்து திராவிட கழக தலைவர் கி. வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். அதில், ரஜினி துக்ளக் ஆண்டு விழாவில் பேசியது தவறானது. 1971ல் நடந்த மாநாட்டில் ராமர், சீதையை நிர்வாணமாக கொண்டு வந்தார் என்று ரஜினி குறிப்பிட்டார். அதை துக்ளக் எழுதியது என்று கூறுகிறார். ஆனால் தற்போது அந்த ஆதாரத்தை ரஜினி அளிக்கவில்லை.

    வேறு பத்திரிக்கை

    வேறு பத்திரிக்கை

    மாறாக வேறு பத்திரிக்கை செய்தியை ரஜினி காட்டுகிறார். அப்படி என்றால் ரஜினியிடம் துக்ளக் குறித்த ஆதாரம் இல்லை. இதை முடிந்தால் அவர் நிரூபிக்க வேண்டும். 2017ல் வந்ததை எல்லாம் அவர் காட்டுவது மிக மிக தவறானது. ரஜினி சொல்வதில் எந்த உண்மையும் இல்லை.

    மக்கள் பண்பு

    மக்கள் பண்பு

    மன்னிப்பு கேட்பதும் வருத்தம் தெரிவிப்பது நல்ல மனிதப்பண்பு, அது ரஜினியிடம் இல்லை. இன்றைய அவரின் பேட்டியே அதற்கு சிறந்த முன்னோட்டம். ரஜினி அரசியலுக்கு வந்தால் எப்படி நடப்பார் என்று தெரிகிறது. அவரின் அரசியல் பொய்யில் இருந்துதான் தொடங்குகிறது.

    ஓடாது

    ஓடாது


    அவர் விரைவில் நீதிமன்றத்தில் பதில் சொல்வார்.நீதிமன்றத்தில் அவர் பதில் சொல்லவேண்டிய காலம் வரும்.
    அவர் தனக்கு தானே குழி தோண்டிக் கொள்கிறார். அவரின் தர்பார் வேண்டுமானால் ஓடலாம், ஆனால் கண்டிப்பாக ராஜ தர்பார் ஓடாது, என்று திராவிட கழக தலைவர் கி. வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Rajinikanth will face court actions soon says DK chief K Veeramani.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X