சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாயங்காலம் ஆயிருச்சு.. எதுவும் வரலையே.. போயஸ் பக்கமே திரும்பித் திரும்பிப் பார்க்கும் ரசிகர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: சாயங்காலம் ஆகிவிட்டது. இதற்கு மேல் நிச்சயம் ரஜினிகாந்த் எந்த அறிவிப்பையும் வெளியிடமாட்டார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ஆம் ஆண்டு கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் இதுநாள் வரை அவர் கட்சியே தொடங்கவில்லை.

அது போல் நாடாளுமன்ற தேர்தல், தமிழக சட்டசபை இடைத்தேர்தல் ஆகிய தேர்தல்களிலும் அவர் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை, அவர் சார்பாக யாரையும் தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கவில்லை.

விழாக்கோலத்தில் போயஸ் இல்லம்.. விஜயதசமி நாளில் கரெக்டா ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்த விஐபி.. அதானா? விழாக்கோலத்தில் போயஸ் இல்லம்.. விஜயதசமி நாளில் கரெக்டா ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்த விஐபி.. அதானா?

தீபாவளி

தீபாவளி

இந்த நிலையில் போன பொங்கல் முதல் இந்த தீபாவளி வரை இப்போது தொடங்குவார், அப்போது தொடங்குவார் என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், எழுச்சி ஏற்பட்டபின்னர் கட்சியை தொடங்குவேன் என்றார்.

நடிகர் ரஜினி

நடிகர் ரஜினி

இது அப்போதைக்கு மற்றவர்களின் வாயை அடைக்க ரஜினி கூறியதாகவே கருதப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விஜயதசமி அன்று கட்சியை தொடங்குவார் என கூறப்பட்டது. ரஜினி ஆன்மிகவாதி என்பதாலும் விஜயதசமி அன்று புதிதாக எதை தொடங்கினாலும் அதில் விஜயம் கிடைக்கும் என்பதாலும் இன்றைய தினம் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

சந்திப்பு

சந்திப்பு

இன்று காலை ரஜினிகாந்தை போயஸ் தோட்ட இல்லத்தில் புதிய நீதி கட்சித் தலைவர் ஏசிசண்முகம் சந்தித்து பேசினார். இதனால் எதிர்பார்ப்புகள் எகிறியது. கட்சி தொடங்குவது தொடர்பாக இன்று அவர் வீடியோவையும் வெளியிடுவார் என்றே தகவல்கள் வெளியாகின.

பாடுவது

பாடுவது

இதனால் போயஸ் கார்டனிலிருந்து நல்ல செய்தி வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் சாயங்கால நேரமே வந்துவிட்டது. இதுவரை எந்த அறிவிப்பையும் காணவில்லை. அதனால் நிச்சயம் இதற்கு மேல் இன்றைய தினம் எந்தவித அறிவிப்பும் வெளியாகாது என்றே தெரிகிறது. காத்திருந்து... காத்திருந்து.. கண்கள் பூத்து.. மனசு சோர்ந்து.. ரசிகர்களே டயர்ட் ஆகிவிட்டார்கள்.

English summary
Rajinikanth will not announce about his political party on this Vijayadasami day today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X