சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினி அரசியலுக்கு வர மாட்டார்... அன்றே சொன்ன ஒன் இந்தியா - சரியாக கணித்த எண்கணித நிபுணர்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று கடந்த மார்ச் மாதமே ஒன் இந்தியாவில் கட்டுரை வெளியானது.

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் இந்த வயதில் அரசியலுக்கு வரமாட்டார் என்பது எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வனின் கணிப்பு. நடிகர் ரஜினிகாந்த் இப்போது அரசியலுக்கு வர நினைப்பது காலம் கடந்த செயல் என்று கூறியுள்ள எண் கணித நிபுணர் அவர் அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை என்ற சரியாக கணித்திருந்தார். ஒன் இந்தியா இணையதளத்திலும் அந்த செய்தி வெளியாகியிருந்தது. அந்த கணிப்பு போலவே இப்போது ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலை விட ஆன்மீகத்திற்குதான் சரியாக இருப்பார் அதற்குக் காரணம் அவரது பெயர் எண் கூட்டுத்தொகை. அரசியலை விட ஆன்மீகம்தான் அவரை துரத்துகிறது எனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு சரியாக இருக்க மாட்டார் இந்த ஆண்டு கட்சி ஆரம்பித்தால் முதல்வராக வாய்ப்பு இல்லை என்றே கணித்துள்ளார் எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன். இன்னும் 3 ஆண்டுகள் ரஜினிகாந்திற்கு சரியில்லாத ஆண்டாக இருக்கிறது என்றும் கணித்துள்ளார் எண் கணித நிபுணர்.

ரஜினிகாந்தின் பிறந்த தேதி கூட்டுத்தொகை 3 ஆம் எண் இது குரு ஆதிக்கம் கொண்ட எண். அதற்கு ஏற்றார்போல தனது அறிவிப்புகளை எல்லாம் 3ஆம் எண் வரும் தேதிகளிலேயே அறிவித்தார். நவம்பர் 30ஆம் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினி டிசம்பர் 3ஆம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ல் வெளியாகும் என்று பதிவிட்டர். இப்போது உடல் நலக்குறைவினால் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

 ரஜினி சார் அரசியலுக்கு வந்திருக்கனும்.. மற்ற நடிகர்களுக்கு நல்ல ரஜினி சார் அரசியலுக்கு வந்திருக்கனும்.. மற்ற நடிகர்களுக்கு நல்ல "பாடம்" கிடைத்திருக்கும்!!

ரஜினிகாந்த் உடல்நிலை

ரஜினிகாந்த் உடல்நிலை

என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சென்னால் நாலு பேர் நாலுவிதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுகு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும் என்று ரஜினிகாந்த் பதிவிட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

குருவும் ரஜினிகாந்தும் ஆன்மீகமும்

குருவும் ரஜினிகாந்தும் ஆன்மீகமும்

ரஜினி காந்த் பிறந்த தேதி 12- 12-1950 கூட்டுத்தொகை 3. இது குருவின் எண். தெய்வபக்தி, தேச பக்தி, உழைப்பாளி. பிறரின் கஷ்டங்களை வாங்கிக்கொள்வார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் என்ற பெயரின் கூட்டுத்தொகை 28 மொத்தம் 1 வருகிறது. உடல் ரீதியாக மனரீதியாக பல போராட்டங்களை பெற்றிருக்கிறார். ஆன்மீகத்தில் ஈடுபட்டிருந்த பலரும் 3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள்தான் அதனால்தான் அவர் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் அவரது மனம் ஆன்மீகத்தை நாடியது.

அரசியலுக்கு வரவே மாட்டார்

அரசியலுக்கு வரவே மாட்டார்

2020ஆம் ஆண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை. 3 ஆண்டுகள் சினிமாவில்தான் இருப்பார். இவருடைய உடல் நலமும் மன நலமும் பாதிப்பை ஏற்படுத்தும் காரணம் ரஜினிகாந்த் என்ற பெயரின் கூட்டுத்தொகை 28 மொத்தம் 1 என்று வருவதுதான் என்று கணித்திருந்தார் எண் கணித நிபுணர் செல்வன். அவர் கணித்தது போலவே ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு அவரது அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை தடுத்துள்ளது.

31/12/2017 அரசியல் அறிவிப்பு

31/12/2017 அரசியல் அறிவிப்பு

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த ஆண்டு 31-12-2017. கூட்டுத்தொகை 8. இது ரஜினிக்கு சரியில்லாத எண். போர் வரட்டும் என்று சொன்னார். ஆன்மீக அரசியல் என்று சொன்னார் அவர் அரசியலை அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தல், 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தல் என பல போர்கள் வந்து விட்டன. ரஜினிதான் போருக்கு தயராக இல்லை. அரசியலில் குதிக்க அவர் தயாராக இல்லை.

7 சிறப்பான எண்

7 சிறப்பான எண்

1973ல் சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் திரைப்பட கல்லூரியில் நுழைந்து அபூர்வ ராகங்களில் நடிக்கிறார். கூட்டு எண் 7. இது அவருக்கு சரியான எண். அதுவும் ஆன்மீகத்திற்கு போவதற்கான எண் 7. சினிமாவை முடித்து விட்டு ஆன்மீகத்திற்கு போக துரிதப்படுத்தியது. சூப்பர் ஸ்டார் என்பதும் கூட்டுத்தொகை 7ல் வருகிறது. 7ஆம் எண் ரஜினிகாந்தை துரத்திக்கொண்டே இருக்கிறது. அதனால்தான் அவர் இமயமலை வரைக்கும் சென்றிருக்கிறார். இப்போது ரஜினிக்கு 70 வயதாகிறது.

வாய்ப்பை நழுவ விட்ட ரஜினிகாந்த்

வாய்ப்பை நழுவ விட்ட ரஜினிகாந்த்

எம்ஜிஆர் இறந்த போதே ரஜினிக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. அப்போதும் அந்த வாய்ப்பை தவறவிட்டார். அதே போல 1996ஆம் ஆண்டில் ரஜினிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டார். ஜெயலலிதா எதிர்ப்பு அலையில் தமிழகம் இருந்த போது திமுக தமாக கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்து கருணாநிதியை முதல்வராக்கினார்.

2023 வரை வாய்ப்பே இல்லை

2023 வரை வாய்ப்பே இல்லை

இந்த வயதில் ரஜினி அரசியலுக்கு வர நினைப்பது சரியில்லை. இன்னும் 3 ஆண்டுகளுக்கு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதைப்பற்றி நினைக்கவே வேண்டாம் என்று கூறியுள்ளார் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வன். 2019ஆம் ஆண்டு சரியாக இருந்தது அப்போது அரசியலில் அடிஎடுத்து வைத்திருக்கலாம். 2020 முதல் 2023 வரை ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்பதே எண்கணித நிபுணரின் கணிப்பாகும்.

English summary
Numerologist JNS Selvan predicts that Rajinikanth will not enter politics at this age. The Numerologist expert who said that actor Rajinikanth is now thinking of coming into politics is a thing of the past and correctly predicted that he was not likely to start a political party. The news was also published on the One India website. Like that prediction, now Rajinikanth has posted that he is not going to start a political party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X