சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தனுஷ்".. ரஜினிகாந்த் இறக்க போகும் அதிரடி அஸ்திரம்?.. பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தனுஷை அரசியலில் களமிறக்க ரஜினி முடிவு செய்வாரா?

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதில்லை.. கிட்டத்தட்ட இது உறுதியாகி விட்டது.. அப்படியானால் அவர் ரசிகர்களுக்கு அளித்த வாக்குறுதி என்னாவது.. சொன்ன சொல்லை நிறைவேற்றத் தவறினார் ரஜினி என்று வரலாறு எழுதி விடாதா.. இப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ரஜினி தரப்பிலிருந்து அதிரடி வரலாம் என்ற எதிர்பார்ப்பும் எல்லோரிடத்திலும் உள்ளது.

ஆம், கடைசி நேரத்தில் தனது மருமகன் தனுஷை அவர் தனது அரசியல் வாரிசாக அடையாளம் காட்டக் கூடும் என்று பலர் பேச ஆரம்பித்துள்ளனர். தன்னால் முடியாததை தனது மருமகன் மூலம் சாதிக்க அவர் முயலலாம் என்றும் ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

இது எந்த அளவுக்கு உண்மையானது, சாத்தியமானது என்று தெரியவில்லை.. ஆனால் சில விஷயங்களை யோசித்துப் பார்த்தால் தனது ரசிகர்களுக்காக அவர் சில தியாகங்களை செய்ய முன்வரலாம் என்றும் பேசப்படுகிறது.

எடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா? எடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா?

அரசியல்

அரசியல்

ரஜினிகாந்த்தைப் பொறுத்தவரை கடந்த பலவருடங்களாக அவரது பெயரை அரசியலுடன் இணைத்துப் பேசி வந்தாலும் அவர் நேரடியாக ஒரு போதும் அரசியலுக்கு வருவதாக சொன்னதே இல்லை. அவரைச் சுற்றி இருந்தவர்கள்தான் தங்களது சுய லாபத்துக்காக, சுய நலனுக்காக அவரை விடாப்பிடியாக இழுத்துக் கொண்டே இருந்தனர்.

தெளிவு

தெளிவு

ஆரம்பத்திலிருந்தே அவருக்கு அரசியலில் பெரிதாக ஆர்வம் இல்லை. சோ உள்ளிட்டவர்கள் கூட இதை பலமுறை வெளிப்படையாகவே சொல்லியுள்ளனர். " ரஜினி வர மாட்டார்" என்று சோவே கூட ஒருமுறை கூறியுள்ளார். காரணம், ரஜினிக்கு அரசியலில் சுத்தமாக ஆர்வமே கிடையாது. அது தன்னோட ஏரியா இல்லை என்பதை அவர் வெகு தெளிவாக புரிந்து வைத்துள்ளார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஆனால் சமீபத்தில் அவருக்கு நெருக்கடிகள் அதிகமாகி விட்டதாக கூறப்படுகிறது. அதாவது ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் உயிருடன் இருந்தவரைக்கும் ரஜினிக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கப்பட்டதில்லை. யாரும் அவரை தேவையில்லாமல் சீண்டியதும் இல்லை. ஆனால் அவர்களின் மறைவுக்குப் பிறகுதான் ரஜினிக்கு நெருக்கடிகள் அதிகமானதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

டெல்லியிலிருந்தும், சென்னையிலிருந்தும் வேறு சில ஊர்களிலிருந்தும் முக்கியப் புள்ளிகள் தொடர்ந்து அவருக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர். ஆனால் ரஜினியிடமிருந்து கிடைத்த ஒரே பதில்.. என்னால இது முடியாதுங்க என்பதுதான். ஆனால் இதை அவருக்கு அழுத்தம் கொடுத்தவர்களும் புரிந்து கொள்ளவில்லை, ரசிகர்களும் கூட புரிந்து கொள்ளவில்லை.

லோக்சபா

லோக்சபா

இந்த நிலையில்தான் தனது அரசியல் பிரவேசத்தை முதல் முறையாக 2 வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக பகிரங்கமாக அறிவித்தார் ரஜினி. அரசியலுக்கு வருவது உறுதி, 234 தொகுதியிலும் நிற்போம், ஜெயிப்போம் என்று முழங்கினார் ரஜினிகாந்த். போர் வரும்போது வருவோம் என்றும் சொன்னார். ஆனால் இடையில் லோக்சபா என்ற போர் வந்து போனது. பல இடைத் தேர்தல்கள் வந்தன. எதிலுமே அவர் தலை காட்டவில்லை. கப்சிப்பாக இருந்தார்.

ஆலோசனை

ஆலோசனை

இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது பல பேச்சுக்கள் அவரது செல்வாக்கையும், பெயரையும் கெடுத்து டேமேஜாக்கிவிட்டன. ரஜினியைச் சுற்றிலும் அவரைத் தூண்டி விடுபவர்கள்தான் அதிகம் உள்ளனரே தவிர, நல்ல ஆலோசனை, அவருக்கு பொருத்தமான ஆலோசனை சொல்லி வழி நடத்தக் கூடியவர்கள் யாரும் இல்லை. அதாவது விஜயகாந்த்துக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் கிடைத்தது போல.. ரஜினிக்கு யாரும் கிடைக்கவில்லை.. இதுதான் உண்மை.

பண்ருட்டியார்

பண்ருட்டியார்

என்று பண்ருட்டியார் விஜயகாந்த்தை விட்டு விலகினாரோ அன்றே விஜயகாந்த்தின் சரிவும் கூட தொடங்கி விட்டது. இதுதான் வரலாறு. ரஜினியைப் பொறுத்தவரை ரசிகர்கள் மனசு கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பவர். இதனால்தான் தொடர்ந்து அவர்களுக்காக ஏதேதோ பேசி அவர்களை ஒரு மகிழ்ச்சியில் வைத்திருந்தார். ஆனால் இப்போது அவரால் முடியாது என்று தெளிவாக உணர்ந்த பின்னர் முடியாது என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார்.

கேலிப்பேச்சு

கேலிப்பேச்சு

இதனால் ரஜினியின் தீவிர ரசிகர்கள் கடும் அப்செட்டாகியுள்ளனர். மற்றவர்களின் கேலிப் பேச்சுக்கு ஆளாகி விட்டோமே, கிண்டலடிப்பார்களே என்று அவர்கள் வேதனைப்படுகின்றனர். இது ரஜினிக்கும் புரியாமல் இல்லை, தெரியாமல் இல்லை. ஆனால் என்ன செய்வது என்று அவருக்கும் கூட புரியவில்லை. உடல் நிலையை ரிஸ்க் எடுத்து அரசியலுக்கு வருவதற்கும் அவர் விரும்பவில்லை. இந்த நிலையில்தான் ரஜினி ஏதாவது நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது.

மருமகன் தனுஷ்

மருமகன் தனுஷ்

இப்போது ஒரு புதுத் தகவல் கிளம்பியுள்ளது. அதாவது ரஜினிகாந்த் நேரடியாக வர மாட்டார்.. கட்சி தொடங்குவார் .. அதேசமயம், அவர் அதில் ஆக்டிவாக ஈடுபட மாட்டார்.. மாறாக தனது மருமகன் தனுஷை களம் இறக்குவார்.. தனது வாரிசாக அவரை அறிவிக்கலாம்.. அவரை வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு தான் செய்ய நினைத்ததை செய்ய முனைவார் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது.

சாமர்த்தியம்

சாமர்த்தியம்

இப்படிச் செய்வதன் மூலம் தனது ரசிகர்களுக்கும் ஏமாற்றம் வராது.. தனுஷுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. எனவே இது டபுள் போனஸாக தனது ரசிகர்களுக்கு அமையும் என்று ரஜினி நினைப்பதாக ஒரு தகவல் கிளம்பி பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இது சாத்தியமில்லை என்று சொல்லி விடவும் முடியாது. ஏற்கனவே தான் முதல்வர் பதவியில் அமர மாட்டேன்.. தலைவராக மட்டுமே இருப்பேன்.. இன்னொருவர்தான் ஆட்சி செய்வார் என்று கூறியவர்தான் ரஜினிகாந்த்.

எதுவும் நடக்கலாம்

எதுவும் நடக்கலாம்

எனவே தனுஷ் ஆப்ஷனை நடக்காது என்று யாரும் புறம் தள்ளி விட முடியாது. தனுஷை நிறுத்தினால் தானே நிற்பதாக எண்ணி ரசிகர்களும் மகிழ்வார்கள் என்று ரஜினி தரப்பு கருதலாம். எனவே இந்த ஆப்ஷன் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஒரு வேளை இது நிஜமாகவே நடந்தால் அது திமுகவுக்கு மட்டுமல்ல.. விஜய் ரசிகர்களுக்கும் கூட சிக்கலாகத்தான் போய் முடியும்.. காரணம் விஜய்யும் கூட அரசியல் அபிலாஷையுடன்தான் வலம் வருகிறார்.. தனுஷ் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் ஏற்கனவே முட்டல் மோதல் உள்ளது. எனவே தனுஷ் களம் இறங்கினால் அது விஜய் தரப்புக்கு கசப்பான செய்தியாக போய் முடியலாம்.

பார்க்கலாம்.. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. இதுவும் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
Rajinikanth: Will Rajini decide to bring Dhanush into politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X