சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினிகாந்த் நவம்பருக்குள் கட்சி துவங்குவாராம்... அழகிரி நீக்கமாம்... சொல்கிறார் கராத்தே!

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்த் வரும் நவம்பர் மாதத்திற்குள் கட்சி ஆரம்பிப்பார். ஸ்டாலின் கூறிய 'ஒன்றிணைவோம் வா', மக்களை சென்றடையவில்லை. ஆனால், ரஜினி கூறிய 'சும்மா விடக்கூடாது' கருத்து உலகளவில் சென்றடைந்துள்ளது என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் இருந்து மறைந்த காமராஜின் 118வது பிறந்த நாள் இன்று. இதை முன்னிட்டு, சென்னை மெரினாவில் அமைந்து இருக்கும் காமராஜர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டு இருக்கும் காமராஜர் சிலைக்கு கராத்தே தியாகராஜன் மரியாதை செலுத்தினார்.

Rajinikanth will start the party before November this year says Karate Thiagarajan

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் பிறந்த நாளில் அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால் இன்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை காணவில்லை. அவரை விரைவில் மாற்ற இருப்பதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாவலரை அசிங்கப்படுத்தி விட்டு, அவரது புகைப்படத்தை அறிவாலயத்தில் ஸ்டாலின் திறப்பது எந்த விதத்தில் நியாயம்? வெளிநாட்டுக்கு முதல்வர் சென்றது தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்டாலின். அவர் கூடத்தான் பாங்காங் சென்று வந்தார். அவர் இதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிடுவாரா.

கொரோனாவிலிருந்து பாதுகாக்க.. தமிழகம் முழுக்க முதியோருக்கு பிசிஜி தடுப்பூசி..தமிழக அரசு அதிரடி கொரோனாவிலிருந்து பாதுகாக்க.. தமிழகம் முழுக்க முதியோருக்கு பிசிஜி தடுப்பூசி..தமிழக அரசு அதிரடி

அவர் (ஸ்டாலின்) முதலில் சரியாக இருக்க வேண்டும். பின்னர்தான் தமிழக அரசை கேள்வி கேட்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் குளறுபடிகளுக்கு காரணமே நிர்வாகிகள் தான். விரைவில் காங்கிரஸ் மாநிலத் தலைவராக கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு, கார்த்திக் சிதம்பரம் அந்தப் பொறுப்புக்கு வருவார். இதற்கான தகவலும் கிடைத்துள்ளது'' என்று கூறினார்.

கொரோனாவிலிருந்து பாதுகாக்க.. தமிழகம் முழுக்க முதியோருக்கு பிசிஜி தடுப்பூசி..தமிழக அரசு அதிரடி

English summary
Rajinikanth will start the party before November this year says Karate Thiagarajan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X