சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கவனம்.. நல்லவரை நாட்டில் வாழ விட மாட்டார்கள்.. துக்ளக் விழாவில் ரஜினி சொன்ன பால்காரர் கதை!

துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா நடிகர் ரஜினிகாந்த் சொன்னார் பால்காரர் கதை இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    துக்ளக் விழாவில் ரஜினி சொன்ன பால்காரர் கதை!

    சென்னை: துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா நடிகர் ரஜினிகாந்த் சொன்னார் பால்காரர் கதை இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

    துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. சென்னையில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். இதை நடிகர் ரஜினிகாந்த் அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

    இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பத்திரிக்கையார்கள் மீதும், பத்திரிக்கை துறை மீது ரஜினிகாந்த் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

    முரசொலி படித்தால் திமுககாரர் என்பார்கள்.. துக்ளக் படித்தால் அறிவாளி என்பார்கள்.. ரஜினி பேச்சு!முரசொலி படித்தால் திமுககாரர் என்பார்கள்.. துக்ளக் படித்தால் அறிவாளி என்பார்கள்.. ரஜினி பேச்சு!

    ரஜினி பேச்சு

    ரஜினி பேச்சு

    நடிகர் ரஜினிகாந்த் இதில் பேசியதாவது, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்னும் சில ஆண்டுகள் மக்கள் சேவையில் இருந்திருக்கலாம்; இதுவும் தந்தைக்குரிய பதவியே. அவருக்கு என் வாழ்த்துக்கள். சோவை போலவே துக்ளக் இதழை கொண்டு செல்கிறார் குருமூர்த்தி.

    சோ எப்படி

    சோ எப்படி

    துக்ளக்கை உருவாக்கிய சோ மிகவும் அறிவாளி. அறிவாளிகள் உருவாவது இல்லை. அவர்கள் பிறப்பார்கள். தேசியம், தெய்வீகம் குறித்து பேசியவர் சோ. அவர் மக்களுக்கு பாடமே நடத்தினார். அவர் மிகப்பெரிய இனத்தையே உருவாக்கினார். அவருக்கு நிறைய எதிரிகள் இருந்தனர்.

    எதிரிகள் இருந்தனர்

    எதிரிகள் இருந்தனர்

    சோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர்; ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. இந்திரா காந்தியை கடுமையாக எதிர்த்தவர். சோ போல இப்போது செய்தியாளர்கள் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும்.

    உங்கள் கதை

    உங்கள் கதை

    உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். ஒரு கிராமத்தில் ஒரு பால் கடை இருந்தது. அங்கு லிட்டர் 10 ரூபாய் என்று கலப்படம் இல்லாமல் பால் விற்றுக்கொண்டு இருந்தார் ஒரு நல்ல நபர். நல்லவரை நாட்டில் வாழ விட மாட்டார்கள். அப்போது அங்கு இன்னொருவர் பால் கடை வைத்தார்.

    தண்ணீர் கலந்தார்

    தண்ணீர் கலந்தார்

    பாலில் அவர் தண்ணீர் கலந்து 8 ரூபாய்க்கு விற்றார். இன்னொருவர் இன்னும் கொஞ்சம் தண்ணீர் கலந்து 6 ரூபாய்க்கு விற்றார். அப்போது ஒருநாள் ஒரு விழா வந்தது. எல்லோரும் விலை கம்மியாக இருந்ததால் 8, 6 ரூபாய் வாங்கினார்கள். இந்த கலப்பட பால் உடனடியாக தீர்ந்தது. இதனால் கடைசியில் வந்த மக்கள் 10 ரூபாய் வாங்கினார்கள்.

    அருமை தெரிந்தது

    அருமை தெரிந்தது

    அப்போதுதான் மக்களுக்கு 10 ரூபாய் பாலின் அருமை, சுவை தெரிந்தது. இவ்வளவு நாள் கலப்பட பால் குடித்துவிட்டோமே என்று வருந்தினார்கள். அவர்களுக்கு 10 ரூபாய் பால் பிடித்து போனது. அதன்பின் அவர்கள் கலப்பட பாலை வாங்கவில்லை. அதேபோல் மக்கள் கலப்படமான செய்திகளை மொத்தமாக தவிர்க்க வேண்டும், என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

    English summary
    Rajinikanth worried about current journalism style conveys the message with Milk Man story in Tughlaq function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X