சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நதிகளை இணைக்காமல் 5 ஆண்டை வீணடித்த பாஜகவை கண்டித்து விட்டு ரஜினி கோரிக்கை வைத்திருந்தால் சூப்பர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினிகாந்த் பேட்டியால் குஷியில் திமுக கூட்டணி-வீடியோ

    சென்னை: ஏன் ரஜினி சார் 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்ததே பாஜகதான். அப்போதே நதி நீர் இணைப்பு குறித்து எதையாவது செய்திருக்கலாம். செய்யவில்லை. சரி 5 ஆண்டுகளை பாஜக வீணடித்துவிட்டது என்று கண்டித்த பிறகாவது கோரிக்கையை வைத்திருக்கலாமே என்று மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

    இந்தியாவில் பாயும் அத்துனை நதிகளையும் இணைக்கும் ஓர் திட்டம் நீண்ட காலமாகவே மக்களால் கோரப்பட்டு வருகிறது. ஆனால் அரசுகள்தான் இதை அமலாக்குவதில் தீவிரம் காட்டவில்லை. இதன் மூலம் வெள்ளம் ஏற்படும் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை நாட்டின் வறண்ட பகுதிகளுக்கு திருப்பி அனுப்பும் சூப்பரான திட்டம் இது.

    இந்த திட்டத்தால் குடிநீர் பஞ்சம் தீர்க்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேலோங்கும் என்பதாகும். ஆனால் பெரும் பணம் செலவாகும் என்பதால் அரசுகள் இதில் தீவிரம் காட்டுவதில்லை. ரஜினிகாந்த் 1990களிலேயே நதிகள் இணைப்புக்கு நன்கொடையாக ரூ. 1 கோடி தருவதாக கூறியிருந்தார்.

    தனி ஆணையம்

    தனி ஆணையம்

    ஆனால் அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் அமைக்கப்படும் என கூறியுள்ளனர். இதை ரஜினிகாந்தும் வரவேற்றுள்ளார்.

    ஆஹா.. இது அதுல்ல.. ரஜினிகாந்த் பேட்டியால் குஷியில் திமுக கூட்டணி.. கலக்கத்தில் அதிமுக கூட்டணி! ஆஹா.. இது அதுல்ல.. ரஜினிகாந்த் பேட்டியால் குஷியில் திமுக கூட்டணி.. கலக்கத்தில் அதிமுக கூட்டணி!

    திட்டம்

    திட்டம்

    அத்துடன் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதலில் நதிகள் இணைப்பை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இது முரண்பாடாக உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர். மேலும் ரஜினியை திருப்திப்படுத்தி அவரது ஆதரவையும், ரசிகர்களின் ஓட்டையும் வாங்கவே பாஜக இந்த திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    முதல் கட்டத் தேர்தல் நடக்கும் தொகுதிகள் விவரம்

    போது

    போது

    வாஜ்பாய் இந்தத் திட்டத்தை கையில் எடுத்தார். பின்னர் வந்த காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டது. கடந்த 5 ஆண்டுகளாக பாஜக ஆட்சிதான் இருந்தது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த 5 ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர், விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அப்போது நதி நீர் இணைப்பு குறித்து மூச்சு கூட காட்டவில்லை.

    கோரிக்கை

    கோரிக்கை

    இப்போது பாஜகவுக்கு கோரிக்கை வைக்கும் ரஜினிகாந்த் நதி நீர் இணைப்பை வலியுறுத்தி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தாலே போதுமே. ஆனால் அவர் அதை செய்யவில்லை. சரி இன்று பாஜகவை பாராட்டிய போதாவது, இந்த 5 ஆண்டுகளைத்தான் வீணடித்துவிட்டீர்கள். இந்த முறை ஆட்சிக்கு வந்தால் முதலில் நதிகள் இணைப்பை செய்யும் வழியை பாருங்கள் என கண்டித்துவிட்டு கோரிக்கை வைத்திருந்திருக்கலாம். ஆனால் அவர் அதையும் செய்யவில்லை.

    புகழுக்கு களங்கம்

    புகழுக்கு களங்கம்

    எனவே இந்த வாக்குறுதியையும் பாராட்டையும் பார்க்கும் போது அனைவருக்கும் லேசான சந்தேகம் வருகிறது. ஆன்மிக அரசியலை முன்வைப்பதாக கூறும் ரஜினி பாஜகவுக்கு வாக்களியுங்கள் என நேரடியாக கூறியிருந்தால் அவரது புகழுக்கு களங்கம் ஏற்பட்டிருக்கும். அதுபோல் ரஜினியிடம் நேரடியாக கேட்டால் ஆதரவு கொடுக்க மாட்டார் என்பதால் அவரை திருப்திப்படுத்தாக வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருந்தது.

    வாய்ஸ்

    வாய்ஸ்

    இதனால் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் கட்சிக்கு வாக்களிக்குமாறு ரஜினி அறிவுறுத்திவிட்டார். இதனால் இந்த கோரிக்கையை நாம் முன்வைத்தால் ரஜினி நேரடியாக இல்லாவிட்டாலும் தனது நிர்வாகிகள் மூலமாவது பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கூறுவார் என பாஜக கணக்கு போட்டுள்ளது. இதெப்படி இருக்கு!.. ஆனால் மக்கள் இப்போது ரொம் புத்திசாலியாக உள்ளனர். எனவே ரஜினியின் இந்த மறைமுக வாய்ஸ் எடுபடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    Rajinikanth should have condemned BJP for wasting 5 years and not implementing rivers interlink.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X