சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நவ.30ல் அதிசயம் அற்புதம் நடக்கும்... #RajinikanthPoliticalEntry ட்ரெண்ட் ஆக்கும் ரஜினி ரசிகர்கள்

ரஜினிகாந்தின் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ட்விட்டரில் #RajinikanthPoliticalEntry என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு டரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் நிலைப்பாடு பற்றி எதுவுமே பேசாமல் இருந்த ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளை 30ஆம் தேதி திங்கட்கிழமையன்று சந்திக்கப் போகிறார். இதற்கான அறிவிப்பு வெளியான நிமிடத்தில் இருந்தே உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள் #RajinikanthPoliticalEntry என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அரசியல் கட்சியை தொடங்கி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்தார். எனினும், கட்சி தொடங்குவதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. கொரோனா பரவல் காரணமாக கட்சி தொடங்கும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. எனினும், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நேரத்தில் முடிவெடுக்க உள்ளதாக ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில்தான் தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ரஜினிகாந்த். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக்குப் பிறகு அரசியல் கட்சி குறித்த உறுதியான முடிவை ரஜினிகாந்த் அறிவிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
ரஜினியின் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பை அறிந்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ட்விட்டரில் பல வீடியோக்களை பதிவிட்டு #RajinikanthPoliticalEntry என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை!அரசியல் கட்சியை அறிவிப்பாரா ரஜினிகாந்த்... மக்கள் மன்ற செயலாளர்களுடன் நவ.30ல் ஆலோசனை!

பாபா பிறந்தநாள்

ரஜினிகாந்த் வரும் 30ஆம் தேதி ரசிகர்களை சந்திப்பதாக கூறியதற்கான காரணத்தை படம் போட்டு விளக்கியுள்ளார் இந்த ரசிகர். அன்றைய தினம் அவர் வணங்கும் பாபாவின் அவதார தினம் என்று தெரிவித்துள்ளார்.

அதிசயம் அற்புதம்

நவம்பர் 30ஆம் தேதி அதிசயம் அற்புதம் நிகழும் என்று கூறுகிறார் இந்த ரஜினி ரசிகர்.

இனிதான் ஆரம்பம்

அவரது வீடியோக்களே பல மீம்ஸ்களுக்கு ட்ரெண்ட் ஆக உள்ளது. இனிதான் ஆரம்பம் என்ற ரஜினியின் டயலாக்கை இப்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

நான் அவங்களோட ஆளு

பாபா படத்தின் பிரபலமான காட்சியை பதிவிட்டிருக்கும் இந்த ரசிகர், By the People, For the People, Of the People என்று கருத்து கூறியுள்ளார். நான் மக்களின் ஆளு என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

ரோல் மாடல் ரஜினிகாந்த்

ரோல் மாடல் ரஜினிகாந்த்

நவம்பர் 30ஆம் தேதி ரஜினிகாந்த் என்ன அறிவிப்பார் என்று காத்துக்கொண்டிருக்கிறோம். அவர் என்ன வேண்டுமானாலும் அறிவிக்கட்டும். அவர் பின்னார் நாங்கள் இருப்போம். என்றைக்கும் அவர் எங்களின் ரோல் மாடல் இன்ஸ்பிரேசன் என்று பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர்.

எல்லாத்துக்கும் நல்ல நேரம்

எல்லாத்துக்கும் நேரம் காலம் பார்த்து செய்வார். அரசியல் அடுத்த பயணம். நல்வாழ்க்கையின் ஆரம்பம், அஸ்திவாரம் இதுக்கு நல்ல நேரம் பார்க்க கூடாது என்று ரஜினி வசனம் பேசியுள்ள வீடியோ காட்சியை பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்.

English summary
Rajinikanth, who did not say anything about the political stance, is scheduled to meet his forum executives on Monday the 30th. Excited fans have been trending since the announcement of the hashtag #RajinikanthPoliticalEntry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X