சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சட்டை என்னுடையதுதான்.. ஆனா மாப்பிள்ளை நான் இல்லை".. டிரெண்ட் ஆன...#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்!

ரஜினி குறித்த ஹேஷ்டேக் ஒன்று ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி ட்வீட் போட்டதற்கு பிறகு, #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்..என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி பெயரில் ஒரு லெட்டர் நேற்றெல்லாம் சோஷியல் மீடியாவில் வலம் வந்தது.. அதில் தன்னுடைய உடல்நலம் குறித்தும், அரசியல் வருகை பற்றி ரசிகர்கள், மக்களே முடிவு சொல்ல வேண்டும் என்பது போலவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது உண்மையல்ல என்று செய்திகள் வந்த நிலையில், இன்று ரஜினியே ஒரு மறுப்பு விளக்கம் தந்தார்,

Rajinkanth fans trending special hashtag

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை.

இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்" என்று கூறியிருந்தார்.

எடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா? எடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா?

வழக்கம்போல, ரஜினி எதை பேசினாலும் வைரல், வாயே திறக்காவிட்டாலும் வைரல் என்றாகிவிடும் நிலையில், இந்த சம்பவமும் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுடு வருகிறது.. அத்துடன், #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்" என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி உள்ளது.

இதுதான் தற்போது தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது.. இதை ரஜினியின் ரசிகர்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரஜினிக்கு ஆதரவாக ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். அதேபோல, #RajinikanthPolitics ஹேஷ்டேக் அடுத்த இடத்த ட்ரெண்டிங்கில் பிடித்துள்ளது!

English summary
Rajinkanth fans trending special hashtag
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X