சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினி வீட்டு வாசலில் நின்ற மாற்று திறனாளி பெண்.. ஓடோடி சென்று உதவி.. போயஸ் கார்டனில் ஒரு நெகிழ்ச்சி!

மாற்று திறனாளி பெண்ணுக்கு ரஜினி உதவி வழங்கினார்

Google Oneindia Tamil News

சென்னை: உதவி கேட்டு வீட்டு வாசலில் நின்றிருந்த ஒரு மாற்று திறனாளி பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு கரம் நீட்டிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த்தை பொறுத்தவரை இயல்பிலேயே கருணை உள்ளம் கொண்டவர்.. சத்தமில்லாமல் பல உதவிகளை செய்து வருபவர். இப்படித்தான் ஒருமுறை, மதுரையை சேர்ந்த் ரஜினி ரசிகர் காசி விஸ்வநாதன் என்பவர், காலா பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு, மதுரைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது எதிர்பாராத விதமாக அவர் கால் ரயில் சக்கரத்தில் மாட்டி துண்டாகிவிட்டது.

உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, பிறகு, ரஜினிக்கும் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக மன்ற நிர்வாகி சுதாகரை அனுப்பி நிதியுதவியும் வழங்கினார். இப்படி தன் ரசிகர்கள் மட்டுமல்ல, திரையுலகம் சார்ந்த எத்தனையோ பேருக்கு ரஜினி மறைமுகமாக உதவி உள்ளார்.. இவைகளில் பெரும்பாலாலும் யாரும் கேட்காமலேயே ரஜினியே தானாக முன்வந்து செய்த உதவிகள்தான் அதிகம்!

 மாற்று திறனாளி

மாற்று திறனாளி

இன்றும் ரஜினி பெண் ஒருவருக்கு உதவி செய்துள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சில தினங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவரது ரசிகர்களும் நிறைய பேர் ரஜினி வீட்டு வாசலில் திரண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.. குறிப்பாக நேற்று முன்தினம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது முதல், ரஜினி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அவரது போயஸ் கார்டன் வீட்டு முன்பு ரசிகர்கள் பலர் காத்திருக்கின்றனர்.

 திருச்சி

திருச்சி

இந்நிலையில் அதில் ஒரு பெண்ணும் நின்றிருந்தார்.. திருச்சியை சேர்ந்த அவர் ஒரு மாற்று திறனாளி.. திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்.. அவர் பெயர் கெளரி ராமையா.. காய்கறி வியாபாரம் செய்பவர்.. ஆனால், சமீப காலமாக எந்த வேலையும் இல்லாமல் இந்த பெண் அவதிப்பட்டு வந்துள்ளார்.. கணவரோ ஆஸ்துமோ நோயாளி.. அவராலும் வேலைக்கு எங்கும் செல்ல முடியவில்லை.. இவர்களுக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர்.

செல்போன்

செல்போன்

மகன் 11வது வகுப்பும், மகள் 10-ம் படிக்கும் படிக்கிறார்கள். தற்போது ஸ்கூல் திறக்காமல் இருப்பதால், வாட்ஸப் மூலம் படித்துக் கொள்ளுங்கள் என்று அரசு சொல்லி விட்ட நிலையில், கௌரி ராமையாவிடம் இதற்கு செல்போன் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தனக்கு அரசு தந்திருந்த மாற்றுத்திறனாளி 3 சக்கர சைக்கிளும் பழுதாகி விட்டதால், எங்குமே செல்ல முடியாமலும் அவதிப்பட்டுள்ளார்.

 தலைவர்கள்

தலைவர்கள்

பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல், கணவனுக்கும் மருந்து வாங்க முடியாமல், தன்னாலும் வேலைக்கு எங்கும் செல்ல முடியாமல் அளவுக்கு அதிகமாக அவஸ்தைப்பட்டு வந்துள்ளார்.. அதனால், சென்னைக்கு சென்று தலைவர்கள் யாரையாவது சந்தித்து உதவி கேட்கலாம் என்று வந்தபோதுதான், ரஜினியை சந்தித்து உதவி கேட்க நினைத்துள்ளார். இப்போதைக்கு 3 சக்கர வண்டி கிடைத்தால், அதை வைத்து தினமும் வேலைக்கு எங்காவது போகலாம் என்று நினைத்துள்ளார்.

 நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

அதனால், போயஸ் கார்டன் வாசலில் இவர் காத்திருந்திருக்கிறார். இந்த விஷயம் நடிகர் ரஜினிகாந்த் காதுக்கு எட்டி உள்ளது.. உடனடியாக தன்னுடைய உதவியாளர் மூலம் மாற்று திறனாளி பெண்ணுக்கு நிதியுதவி அளித்துள்ளார்... மேலும் இவர்களின் குடும்ப விவரங்களை அறிந்ததுடன், பிள்ளைகளையும் படிக்க வைக்க முன் வருவதாகவும் ரஜினி தெரிவித்துள்ளாராம்! வறுமையில் உள்ள மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

English summary
Actor Rajinkanth helps disabled Trichy woman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X