சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Rajinikanth: ரஜினி ரெடியாய்ட்டார் போல.. கூட்டணி இப்படி இருக்குமா.. மாஸ் பிளான்.. பரபரப்பாகும் களம்!

அரசியல் கட்சி தொடங்கும் வேலை மும்முரமாக நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    பாமக - ரஜினி கூட்டணியின் பின்னணி இதுதான் | Rajinikanth lead alliance will target to DMK

    சென்னை: ரஜினியை முன்னிறுத்தி பாஜக ஒரு வியூகத்தை ஆரம்பித்துள்ளது. நேரடியாக ஆதரவைப் பெற முடியாது என்பதால் ரஜினி மக்கள் முன்பு நிறுத்தப்படுகிறார். இந்த வியூகம் எந்த அளவுக்கு பலன் தரும் என்பது அடுத்த கேள்வி.. ஆனால் இப்போதைய சூழ்நிலையில் யாரெல்லாம் ரஜினி பக்கம் அணிவகுப்பார்கள் என்ற ஹேஷ்யங்கள் களை கட்டியுள்ளன.
    இதில், முதல் ஆளாக பாமக வருவதாக தெரிகிறது. அதை தமிழருவி மணியனே மணியடித்து தொடங்கி வைத்து விட்டார். இதுவரை மணியனுக்கு பாமக தரப்பு மறுப்பு தெரிவிக்காமல்தான் உள்ளது.

    இதனால் இது உண்மையாகவும் இருக்கலாம். விஜயகாந்த்துடன் கை கோர்த்த அனுபவம் பாமகவுக்கு உள்ளதால் ரஜினியுடனும் அவர்கள் இணக்கமாக செல்வதில் எந்த சிக்கலும் இல்லை.

     பழைய பன்னீர் செல்வம்

    பழைய பன்னீர் செல்வம்

    அடுத்து தேமுதிக இணையலாம். தேமுதிகவைப் பொறுத்தவரை மீண்டும் தனித்துப் போட்டியிடும் தெம்பெல்லாம் கிடையாது. விஜயகாந்த் எழுச்சி பெற்று மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக திரும்பினால்தான் அதற்கான சாத்தியம் உள்ளது. அதுவரை வாய்ப்பே இல்லை. எனவே ஆதாயம் எந்தப் பக்கம் அதிகமாக இருக்குமோ அந்தப் பக்கம்தான் அவர்கள் போயாக வேண்டும். எனவே தேமுதிகவும் ரஜினி கூட்டணியில் இணையலாம்.

     தனித்து போட்டி

    தனித்து போட்டி

    அதிமுக நிச்சயம் ரஜினியுடன் இணையுமா என்று தெரியவில்லை. ஆனால் பாஜகவைப் பகைத்துக் கொண்டு அவர்கள் சுயமாக முடிவெடுப்பார்களா என்று தெரியவில்லை. அப்படி எடுக்க முடியாவிட்டால் நிச்சயம் ரஜினியுடன் கை கோர்க்கவே அவர்களும் விரும்புவார்கள். ஒருவேளை அதிமுக தனித்துப் போக முடிவு செய்தால் அல்லது அதிமுக வேண்டாம் என பாஜக முடிவெடுத்தால் அதிமுக புதிய கூட்டணியை அமைக்க நேரிடும். அதற்காகத்தான் சீமானுடன் பேசி வருவதாக சொல்கிறார்கள்.

     சாதி வாக்குகள்

    சாதி வாக்குகள்

    அடுத்து சிறு சிறு கட்சிகள் உள்ளன. குறிப்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சக்தி வாய்ந்த சிலரை ரஜினி பக்கம் கொண்டு வரலாம். அதேபோல தென் மாவட்டங்களில் அதிக வாக்குகளைக் கொண்ட முக்குலத்தோர் மற்றும் நாடார் சமுதாயத்தினரின் வாக்குகளைக் கவரும் வகையிலும் சிலரை வளைத்துப் பிடிக்க முயற்சிக்கலாம். அதேபோல தலித் வாக்குகளும் முக்கியமானவை.

    திருமாவளவன்

    திருமாவளவன்

    தலித் வாக்கு வங்கியைப் பொறுத்தவரை இப்போதைக்கு 2 பேர்தான். ஒருவர் திருமாவளவன் இன்னொருவர் கிருஷ்ணசாமி. இவர்களில் யார் ரஜினி பக்கம் போகப் போகிறார்கள் என்று தெரியவில்லை. திருமாவளவன் போவாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் ரஜினியுடன் பேசியதாக முன்பு ஒரு தகவல் வெளியானது. அதை யாரும் மறுக்கவில்லை. எனவே ரஜினி கட்சி ஆரம்பித்து தேர்தல் நெருக்கத்தில் திருமாவின் நிலைப்பாடு குறித்துத் தெரிய வரலாம்.

     ரஜினி வாக்குகள்

    ரஜினி வாக்குகள்

    இதெல்லாம் கட்சிகள் நிலவரம்.. அடுத்து தலைவர்கள்.. பல முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள், ஜாதிப் பிரமுகர்களை ரஜினி பக்கம் கொண்டு வரும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. ரஜினிக்கு ஜாதி ரீதியான ஆதரவைத் திரட்டினால்தான் தேற முடியும் என்பதாலும், படித்தவர் வாக்குகளை விட படிக்காதவர்களின் வாக்குகளே ரஜினிக்கு கை கொடுக்கும் என்பதாலும் அந்த மாதிரி குறி வைத்து வாக்கு வங்கியை உருவாக்கும் முயற்சிகள் நடக்கிறதாம்.

    English summary
    actor rajinkanth is ready to start his political party, but It is not known which parties will join him in alliance
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X