சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உட்காருங்கண்ணா.. இருக்கட்டும் பரவாயில்லைம்மா.. நீங்க சீக்கிரம் வரணும்.. சிரித்து கொண்ட ரஜினிகாந்த்

ஓடும் விமானத்தில் ரஜினி - சசிகலா புஷ்பாவும் திடீரென சந்தித்து கொண்டனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    Thalaivar is back:இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி

    சென்னை: "அண்ணா நீங்க உட்காருங்க.. இருக்கட்டும் பரவாயில்லைம்மா.." என்று பறக்கும் விமானத்தில் ஒரு பாச நிகழ்வு நடந்துள்ளது.

    நிறைய சந்தர்ப்பங்களில் வேறு வேறு கட்சியை சார்ந்த தலைவர்கள் ஒரே நிகழ்ச்சிகளில் சந்தித்துகொள்வது வழக்கம். அப்படியே சந்தித்து கொண்டாலும், முகம் கொடுத்து பெரும்பாலும் பேசிக் கொள்ளவே மாட்டார்கள்.

    இவர்கள்தான் இப்படி என்றால், கட்சி நிர்வாகிகளும், தங்கள் தலைமைக்கு ஒரு தவிர்த்தல் போக்கையே மேற்கொள்வார்கள். இப்படி கல்யாணம், விசேஷம் மட்டும் இல்லாமல்.. விமான பயணங்களிலும் நடக்கும். ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தால், ஆளுக்கு ஒரு பக்கம் கோஷங்களை எழுப்பி வரவேற்பார்கள்.

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா

    இன்று நிலைமையே வேறு.. ஏர் இந்தியா ஃபிளைட் பறந்து கொண்டிருந்தது. அப்போது மணி 11.30 இருக்கும். இமயமலைக்கு சென்ற ரஜினி அந்த ஃபிளைட்டில்தான் டெல்லியில் இருந்து வந்துள்ளார். அதே ஃபிளைட்டில் அதிமுக ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவும் வந்துள்ளார்.

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா

    ஃபிளைட்டுக்குள் ரஜினி உட்கார்ந்திருந்ததை பார்த்ததுமே குஷியாகிவிட்டார். அருகில் சென்று '' வணக்கம் அண்ணா.. நான்தான் சசிகலா புஷ்பா'' என்று சொல்லி கைகுவித்து வணக்கம் சொன்னார். பொதுவாக யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை தரும் எளிய மனிதர் ரஜினி. இப்போது சசிகலா புஷ்பா என்று பெயரை கேட்டதுமே சட்டென எழுந்து நின்று வணக்கம் சொன்னார்.. ''வணக்கம்... வணக்கம்... ரொம்ப சந்தோஷம்'' என்றார்.

    சசிகலா புஷ்பா

    சசிகலா புஷ்பா

    ஃபிளைட்டுக்குள் ரஜினி உட்கார்ந்திருந்ததை பார்த்ததுமே குஷியாகிவட்டார். அருகில் சென்று '' வணக்கம் அண்ணா.. நான்தான் சசிகலா புஷ்பா'' என்று சொல்லி கைகுவித்து வணக்கம் சொன்னார். பொதுவாக யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை தரும் எளிய மனிதர் ரஜினி. இப்போது சசிகலா புஷ்பா என்று பெயரை கேட்டதுமே சட்டென எழுந்து நின்று வணக்கம் சொன்னார்.. ''வணக்கம்... வணக்கம்... ரொம்ப சந்தோஷம்'' என்றார்.

    எப்படி இருக்கீங்க?

    எப்படி இருக்கீங்க?

    "ஏன்.. எழுந்திருச்சிட்டீங்க.. உட்காருங்க அண்ணா" என்று சசிகலா புஷ்பா சொல்ல, ''பரவாயில்லம்மா... நீங்க எப்படி இருக்கீங்க...'' என்று ரஜினி கேட்டுள்ளார்.

    அரசியல் வருகை

    அரசியல் வருகை

    அதற்கு சசிகலா புஷ்பாவோ, தமிழக அரசியலில் தலைவர்களுக்கு பஞ்சம் இருக்கு. ஒரு நல்ல தலைவரை தமிழகம் தேடி கொண்டிருக்கிறது... ஒரு நல்ல தலைவரால்தான் தமிழகத்துக்கு முதல்வராக இருக்க முடியும்.. அப்படி பார்த்தால், நல்ல தலைவராக உங்களைத்தான் மக்கள் பாக்கிறாங்க... நீங்க அரசியலுக்கு வருவீங்களான்னு மக்கள் கேட்கிறாங்க.. நிறைய கிராமங்களில் இருந்து இப்படி தகவல்கள் எனக்கு வருது.. அதனால நீங்கதான் நல்ல தலைவர்.. மக்கள் நினைக்கும் தலைவர் நீங்களேதான்.. அரசியலுக்கு கண்டிப்பாக வரவேண்டும்.. மாற்றத்தை நீங்கதான் தரணும்" என்றார்

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    நல்லா இருக்கீங்களான்னு ஒரு கேள்விதான் ரஜினி கேட்டாரு.. அதற்கு சசிகலா புஷ்பா இவ்வளவு பெரிய பதிலை விளக்கமாக தந்துவிட்டார். இதையெல்லாம் கேட்ட ரஜினி கடைசியாக, "மகிழ்ச்சி" என்று ஒத்த வரியில் சொல்லி இருக்கிறார். காலங்காலமாக தமிழக மக்கள் ரஜினியை கூப்பிட்டு சலித்துபோய் டயர்ட் ஆகிவிட்ட நிலையில், சசிகலா புஷ்பா இதே கோரிக்கையை பறக்கும் விமானத்தில் வைத்துள்ளது ஆச்சரியம்தான்.

    பாராட்டத்தக்கது

    பாராட்டத்தக்கது

    அரசியலையும் தாண்டி, யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய மரியாதையை தந்து நலம் விசாரிப்பது ரஜினியின் அடிப்படை நல்ல குணங்களில் ஒன்று. மாற்று கட்சி, ஆதரவு கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், ஓடுகிற பிளைட்டில் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லைதான்.. இருந்தாலும் அந்த பண்பு பாராட்டக்கூடியதே!

    English summary
    mp sasikala pushpa met and said to actor rajnikanth that "tamil nadu looking good leader" in the air india flight
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X