சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஏன் கம்மென்று இருக்கிறார்!

அமித்ஷாவின் இந்தி மொழி கொள்கையில் ரஜினியின் கருத்து தெரியவில்லை

Google Oneindia Tamil News

Recommended Video

    kamalhassan video about hindi imposition

    சென்னை: அமித்ஷா பற்ற வைத்த "இந்தி மொழி" கருத்து கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. இதில் ரஜினி எந்த கருத்தையும் சொல்லாமல் உள்ளது வழக்கமான வியப்பாக உள்ளது!

    "நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நம்முடைய தாய்மொழியை பயன்படுத்துவதை அதிகமாக்க வேண்டும், ஒருமொழியான இந்தியால் மட்டும்தான், மகாத்மா காந்தி, இரும்பு மனிதர் சர்தார் வல்லவாய் படேலின் கனவை நிறைவேற்ற முடியும்" என்று பாஜக தலைவர் அமித்ஷா.. ஏதோ உணர்ச்சிவசப்பட்டு இல்லாமல்.. அழுத்தம் திருத்தமாக, தெள்ளத் தெளிவாகவே தனது கருத்தை சொல்லி இருந்தார்.

    இதையடுத்து திமுக, பாமக, விசிக, என முக்கிய கட்சி தலைவர்கள் கொதித்து போய் கண்டனங்களை பதிவிட்டனர். ஆனால் அதிமுகவோ, மோடி, அமித்ஷா இழுக்கிற இழுப்புக்கெல்லாம் வருவது போலவே இந்த விஷயத்திலும் அதன் நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிகிறது.

    ஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்ஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்

    கடும் கண்டனம்

    கடும் கண்டனம்

    இதில், கமல் ஏன் இன்னும் வாயை திறக்கவில்லை என்று சலசலக்கப்பட்ட நிலையில், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து ட்வீட், முதல் வீடியோ வரை பதிவிட்டு விட்டார். "மொழிக்காக தமிழ் மக்கள் போராட்டத்தில் இறங்கினால் ஜல்லிக்கட்டு புரட்சியை விட பல மடங்கு இருக்கும், அப்படிப்பட்ட போராட்டம் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் நல்லதல்ல" என்று தன் தரப்பு கருத்தை ஆணித்தரமாகவும், எச்சரிக்கும் விதத்திலும் வீடியோவில் கமல் பேசியுள்ளார்.

    உறுதி

    உறுதி

    ஆனால் அமித்ஷாவின் இந்தி மொழி பேச்சுக்கு கமல் தரப்பில் நமக்கு பதில் கிடைத்து விட்டது என்பதுடன், இந்தி மொழி எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் உறுதியாகத்தான் உள்ளார் என்றும் வெளிப்பட்டுள்ளது. ஆனால், ரஜினியை நினைத்தால்தான் தலை சுற்றுகிறது.

    ரஜினி கருத்து?

    ரஜினி கருத்து?

    வெங்கய்யநாயுடு புத்தக வெளியீட்டு விழாவில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு கையாண்ட உத்திகளுக்கு ‘ஹேட்ஸ்ஆப்' என்றவர், மோடியும் அமித்ஷாவும், கிருஷ்ணன் + அர்ஜூனன் போன்றவர்கள் என்று உச்சி முகந்தார். இதில் யார் கிருஷ்ணன், யார் அர்ஜூனன் என்பது ரஜினிக்குதான் வெளிச்சம் என்றாலும், ஒரே நாடு ஒரே மொழியில் ரஜினியின் கருத்து தமிழக மக்களுக்கு அவசியமாகிறது.

    ஒரே மொழி

    ஒரே மொழி

    ஏற்கனவே பாஜகவின் பிம்பம் என்றும், பாஜகவுக்கான களத்தை ரஜினி, தமிழகத்தில் அமைத்து தருகிறார் என்றும் பலமான ஊகங்கள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் அமித்ஷாவின் கருத்துக்கு ஒரு பேச்சையும் எதிர்த்து பேசவில்லை. இதற்கு காரணம், சொந்தமாக கட்சி ஆரம்பிக்கும் ரஜினி, பாஜகவின் கையை பிடித்து நடக்கலாம் என்பதால்கூட இருக்கலாம். ஒருவேளை ரஜினி கட்சியை ஆரம்பித்தாலும் சரி, அல்லது பாஜகவுக்கு பாதை வகுத்து உதவினாலும் சரி.. "எந்த காலத்திலும் ஒரே மொழி ஒரு நாட்டை ஆண்டது கிடையாது" என்பதுதான் உண்மை.

    துரைமுருகன்

    துரைமுருகன்

    திமுக மூத்த தலைவர் துரைமுருகன் இது சம்பந்தமாக ஒரு கருத்தை மிக அழகாக கூறியிருந்தார்.. "ஒரே மொழியை நாடு முழுவதும் உருவாக்க அசோகரால் முடியவில்லை, அக்பரால் முடியவில்லை, ஆனால் அமித்ஷா நினைக்கின்றார். நினைப்பதில் தவறில்லை. ஆனால் தமிழக மக்கள் விடவே மாட்டார்கள்" என்றார். இதுதான் அமித்ஷா கருத்தை ஆதரிப்பவர்களுக்கான பதிலும் கூட.. அது ரஜினியாக இருந்தாலும் சரி!

    English summary
    Actor Rajnikanth and MNM Kamala hasan didnot say anything about Amit Shahs Hindi Impose Statement
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X