சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒலிம்பிக் தீபம் போல.. தலைக்கு மேல் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி வீட்டுக்கு வெளியே வந்த ரஜினிகாந்த்

Google Oneindia Tamil News

சென்னை: கொரானா பிரச்சினைக்கு எதிராக ஒற்றுமை ஒளியை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று இன்று இரவு 9 மணி முதல் ஒன்பது நிமிடங்களுக்கு நாடு முழுக்க மக்கள் வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு தீபம் அல்லது மெழுகு வர்த்தி அல்லது செல்போன் ஆகியவற்றை மூலமாக ஒளியை பரப்பி தங்கள் ஒற்றுமையை தெரிவித்தனர்.

Recommended Video

    நாடு முழுவதும் களைகட்டிய ஒற்றுமை தீபம்... பிரபலங்களும், தலைவர்களும் விளக்கேற்றினர்

    கடந்தமுறை ஒருநாள் மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். அப்போது மாலை 5 மணியளவில் அனைவரும் வீட்டின் வெளியே வந்து கைதட்டி மருத்துவ பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களுக்கு உங்கள் பாராட்டுகளை தெரிவியுங்கள் என்று கேட்டிருந்தார்.

    Rajnikanth light off candle to support light for India moment

    இதை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ . பன்னீர்செல்வம், உள்ளிட்டோர் கைதட்டி தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தனர். இன்றும் அவர்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து பிரதமர் வேண்டுகோளுக்கு ஆதரவு அளித்தனர்.

    அகல் விளக்குகளை ஏற்றச் சொன்ன பிரதமர்.. பட்டாசு வெடித்துக் கொண்டாடி விட்ட மக்கள்!! அகல் விளக்குகளை ஏற்றச் சொன்ன பிரதமர்.. பட்டாசு வெடித்துக் கொண்டாடி விட்ட மக்கள்!!

    இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று தனது இல்லத்திற்கு வெளியே மெழுகுவர்த்தி ஒன்றை கையில் ஏந்தியபடி வருகை தந்தார். ஒலிம்பிக் தீபம் போல கையின் மேலே வைத்துக்கொண்டு அவர் வெளியே வந்ததும் ஊடகத்தினர் அதைப் புகைப்படமாக எடுத்தனர்.

    வேட்டி மற்றும் பைஜாமா மாதிரியான ஒரு சட்டை அணிந்தபடி ரஜினி வருகை தந்தார். தலைக்கு மேல் உயர்த்தி பிடித்தபடி மெழுகுவர்த்தியை ஏந்தி அவர் தனது ஆதரவை தெரிவித்தார். 9 நிமிடங்கள் ஆன பிறகு அவர் எதுவும் பேசாமல் வீட்டுக்கு சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actor Rajinikanth light up candle and come forward in front of his house in Chennai to give support to the Prime Minister call.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X