சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவில் ராஜ்யசபா எம்பி வேட்பாளர்கள் யார் யார்? பரபரப்பு தகவல்கள்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக சார்பில் எம்பிக்களாக போகப்போகிறவர்கள் யார் யார் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜிகே வாசன், தம்பிதுரை, கேபி முனுசாமி ஆகியோர் எம்பிக்களாக இறுதி செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இதில் எம்எல்ஏக்களின் பலம் அடிப்டையில் திமுக சார்பில் மூன்று எம்பிக்களும், அதிமுக சார்பில் 3 எம்பிக்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த தேர்லில் திமுக சார்பில் போட்டியிட உள்ள 3 எம்பி வேட்பாளர்களை கடந்த பிப்ரவரி 1ம் தேதி திமுக அறிவித்தது.

திருச்சி சிவா

திருச்சி சிவா

இதன்படி தி.மு.க.வின் ராஜ்சபா எம்பி வேட்பாளர்களாக திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ மற்றும் முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதிமுக சார்பில்போட்டியிட உள்ளவர்கள் யார் யார் என்பது குறித்து இன்னமும் அறிவிக்கவில்லை. அந்த கட்சி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக தலைவர்கள்

அதிமுக தலைவர்கள்

அ.தி.மு.க.வை பொருத்தவரை கூட்டணி கட்சிகளாக தேமுதிக, தாமாக உள்ளிட்ட கட்சிகள் ராஜ்யசபா எம்பி பதவி வேண்டும் என்று கேட்டு வருகின்றன. இதேபோல் அதிமுகவில் கட்சிக்குள்ளும் மூத்த தலைவர்களான தம்பித்துரை, கே.பி.முனுசாமி, மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எம்பி சீட் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் தங்களுக்கு சீட் தர வேண்டும் என்று கேட்கிறார்களாம். இதேபோல், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க தலைவர்களும் எம்.பி சீட் கேட்டு வருகிறார்கள்

 தேமுதிகவுக்கு நோ

தேமுதிகவுக்கு நோ

இதில் தேமுதிகவுக்கு எம்பி சீட் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. கட்சிக்குள் பெருந்தலைகள் சீட் கேட்பதால் தேமுதிகவுக்கு எம்பி சீட் தருவதற்கு அதிமுக தயாராக இல்லை என கூறப்படுகிறது. அதேநேரம் பாஜகவின் ஆதரவு காரணமாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனுக்கு எம்பி சீட் தருவதற்கு அதிமுக தயாராக வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தம்பித்துரை மீண்டும்

தம்பித்துரை மீண்டும்

அத்துடன் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை ஆகியோருக்கு எம்பி சீட் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கே.பி. முனுசாமி, அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளராகவும், மூத்த தலைவர்களுள் ஒருவராகவும் இருக்கிறார். அவருக்கு இந்த முறை எம்பி சீட் கொடுக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாம்.

இறுதி பட்டியல்

இறுதி பட்டியல்

இதேபோல் கடந்த லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் ஜோதிமணியிடம் தோற்ற முன்னாள் துணை சபாநாயகர் , தம்பிதுரை, டெல்லி அரசியலுக்கு பொருத்தமானவர் என்பதால் அவருக்கும் எம்பி சீட் வழங்க அதிமுக தலைமை திட்டமிடுள்ளதாம். இதன்படி கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் ஜிகே வாசன் ஆகியோர் அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக இறுதி செய்யப்படலாம் என்கிறார்கள். எனினும் இதுபற்றி விரைவில் அதிமுக கட்சி தலைமை கூட்டத்தை கூட்ட உள்ளது. அதன் பிறகே உறுதியாக சொல்ல முடியும என்கிறார்கள்.

English summary
tamil nadu rajya sabha mp election: aiadmk candidates list may released soon, gk vasan , kp munusamy and thambidurai may contest this election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X