• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சிக்கல் வர்மாவின் இயக்கத்தில் சசிகலா.. புது குண்டுடன் ரெடியாகிறார் ராம் கோபால் வர்மா!

|

சென்னை: சும்மாவே யூ டர்ன் போட்டு தாக்குவார்.. இப்போது சசிகலாவின் வாழ்க்கையை படமாக எடுக்க போகிறாராம் ராம்கோபால் வர்மா!

தெலுங்கு பட உலகில் சர்ச்சைக்குரிய படங்கள் அது ராம்கோபால் வர்மாதான் என்ற ஒரு பெயர் நின்று விட்டது. இந்த சர்ச்சை புயல் ஆந்திராவை தாண்டி தமிழகத்துக்கும் அவ்வப்போது வந்து செல்லும்.

குறிப்பாக, ஜெயலலிதா இறந்தபின்,நிலவும் அரசியல் குழப்பம் பற்றி கருத்து சொல்லி அரசியல் தலைவர்களுக்கு ஒரு பகீர் ஏற்படுத்தி விட்டு போனார். இதையடுத்து சசிகலாவின் அரசியல் பிரவேசம், சொத்துக்குவிப்பு வழக்கில் கைதானது போன்றவற்றை பற்றியும் துணிந்து ட்விட்டரில் கருத்து சொன்னார்.

"என்னங்க பாமக சின்னம் ஆப்பிள்ங்கிறாரு.." .. அட அவர் தப்பாச் சொல்றாருங்க.. பாமக சின்னம் தேங்காய்!!

பொறுக்கிகள்

பொறுக்கிகள்

அதிலும் ஒரு ட்வீட்டை இன்னமும் மறக்க முடியாது, " பொறுக்கிகள் தஞ்சமடையும் இடம் பொழுதுபோக்கிடம் அரசியல் என்று பெர்நாட்ஷா கூறினார், ஆனால், தமிழகத்தில் பொழுதுபோக்கும் ரிசார்ட்டில்தான் அரசியல் பொறுக்கிகள் இருக்கிறார்கள் இது சசிகலா சொன்னது'' என்று பதிவிட்டார்.

ஏன் மவுனம்?

ஏன் மவுனம்?

அதுமட்டுமல்ல.. "தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ‘மன்னார் குடி மாபியா' கட்டுப்படுத்தினால், மாநிலத்தில் ஆட்சி பெங்களூரு சிறையில் இருந்து தான் நடக்கும். சக்தி வாய்ந்த ஜெயலலிதாவின் ஆன்மா யாரையும் தண்டிக்காமல், ஆசிர்வதிக்காமல் ஏன் மவுனமாக இருக்கிறது? தமிழகத்தின் கடவுள்களும், பக்தர்களும் என்ன செய்கிறார்கள்" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

போயஸ் கார்டன்

போயஸ் கார்டன்

கடந்த 2017-ம் ஆண்டிலேயே "சசிகலாவை பற்றி ஒரு படம் எடுக்க போகிறேன். ஜெயலலிதா, சசிகலா இவர்கள் இருவரின் உறவின் தன்மை குறித்து போயஸ் கார்டன் பணியாளர்கள் சொன்னார்கள். என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. அது எல்லாவற்றையும் என் படத்தில் கொண்டு வருவேன்" என்றுகூட சொன்னார்.

இருவரது உறவு

இவ்வளவும் சொல்லிவிட்டு காணாமல் போய்விட்டார் ராம்கோபால் வர்மா. இந்நிலையில் மீண்டும் சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாக சொல்லி இருக்கிறார். அதாவது ஜெயலலிதாவுடன் சசிகலாவுக்கு இருந்த உறவு முதல் பெங்களூர் சிறைக்கு சசிகலா செல்வது வரை இதில் படமாக்கப்படும் என்று சொல்கிறார்.

படம் ரிலீஸ் தேதி

படம் ரிலீஸ் தேதி

ராம்கோபால் படம் என்றாலே வராத பரபரப்பும் வந்துவிடும். அதுவும் சசிகலாவை பற்றி எடுக்க போகிறார்.. என்னவெல்லாம் சொல்லி வைக்க போகிறாரோ.. படம் ரிலீஸாகி என்னவெல்லாம் வெடித்து கிளம்ப போகிறதோ தெரியவில்லை.

டென்ஷன் ஆரம்பம்

டென்ஷன் ஆரம்பம்

இது எல்லாவற்றையும்விட சிக்கல் என்னவென்றால், ஏற்கனவே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகி கொண்டிருக்கிறது. ஏஎல் விஜய் தயாரிப்பில் "தலைவி" என்ற பெயரில் இது உருவாகி வருவதுடன், ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24- அன்று வெளியிட உள்ளது. இப்போது படமாக போகும் சசிகலாவின் வாழ்க்கை வரலாறும் அதே பிப்ரவரி 24-தான் வெளியிடப்படும் என்று ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளது மேலும் டென்ஷனை ஏற்றி உள்ளது.

ஒரே நாளில் ஜெயலலிதாவும், சசிகலாவும் என்ன செய்ய போகிறார்களோ?

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Director Ramgopal Varma has announced going to direct Sasikala's biography movie. He is planning to release the film on February 24th
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more