• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கடைசி வரைக்கும் இராம கோபாலன்.. அதுக்கு உடன்படவே இல்லை.. எத்தனை பெரிய வைராக்கிய மனிதர் பாருங்க..!

|

சென்னை: திமுக திருந்தாத கட்சி என்பதை இந்துக்கள் உணர வேண்டும் என்று சொல்லியவர் ராமகோபாலன்.. கருணாநிதி முதல் கி.வீரமணி வரை கருத்து மோதலில் ஈடுபட்டு கொண்டே இருந்தவர் ராமகோபாலன்.. அதேசமயம், இந்துக்களின் உரிமைக்காகவும், அவர்களின் சுயமரியாதைக்காகவும் பாடுபட்டவர் என்றால் ராமகோபாலன் அது மிகையல்ல.. 94 வயதுவரை தன் வாழ்நாளெல்லாம் பொதுவாழ்க்கைக்காகவே அர்ப்பணித்து கொண்ட இராமகோபாலன் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை தெரியுமா?

ராமகோபாலன் என்றால் இந்து முன்னணி, இந்து முன்னணி என்றால் இராமகோபாலன்தான்.. திராவிட கட்சிகளை எல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அலற விட்டவர் இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலன்.. இன்றுள்ள எச்.ராஜாவை விட பன்மடங்கு துணிச்சல்காரர்.. அதே சமயம் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர்.

இந்துக்களுக்காக போராடுவதற்காகவும், நாத்திக பிரச்சாரத்தை முறியடிப்பதற்காகவும், இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.. இந்த அமைப்பு தொடங்கப்பட்டபிறகுதான், இந்துக்களிடம் ஓரளவு விழிப்புணர்வு வந்தது என்றும் சொல்லலாம். வருஷந்தோறும் விநாயக சதுர்த்தி விழாவினை ஏற்பாடு செய்து ஊர்வலம் நடத்துவது இந்து முன்னணியின் முக்கிய பணி ஆகும்.. இதில் தான் இராமகோபாலன் அதிகமாக ஃபேமஸ் ஆனார்.

கொரோனா தடுப்பு மருந்துக்கு... சுறா எண்ணெய்... கலிபோர்னியா அமைப்பு எதிர்ப்பு!! கொரோனா தடுப்பு மருந்துக்கு... சுறா எண்ணெய்... கலிபோர்னியா அமைப்பு எதிர்ப்பு!!

 பிரச்சனைகள்

பிரச்சனைகள்

இராமகோபாலன் ஆக்டிவாக இருந்த சமயத்தில் எத்தனையோ பிரச்சனைகளை சமாளித்தார்.. இவர் வாயை திறந்தாலே அது பரபரப்பாகிவிடும்.. அன்றைய தினம் அந்த செய்திதான் முக்கிய இடத்தை மீடியாவில் பெற்றுவிடும்... மறைந்த தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா முதல் இப்போதுள்ள மூத்த திராவிட தலைவர்கள் வரை வீரமணியுடன் கருத்து மோதல்களில் ஈடுபட்டவர்கள்தான்.

திமுக

திமுக

"திமுக திருந்தாத கட்சி என்பதை திமுகவில் இருக்கும் தன்மானமும், சுயமரியாதை உள்ள இந்துக்கள் இதனை உணர்ந்து, அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்" என்று சொன்னவர்.. இவர் ஒருமுறை கருணாநிதியை சந்தித்தபோது, அவருக்கு "பகவத் கீதை" புத்தகத்தை தந்தார்.. உடனே கருணாநிதி சும்மா விடுவாரா? பதிலுக்கு இவருக்கு ‘கீதையின் மறுபக்கம்' என்ற புத்தகத்தை தந்தார்.. கருணாநிதி இந்து விரோதி என்பார்.. ஜெயலலிதாவை இந்து துரோகி என்பார்.. இப்படிதான் இவரது நாகரீக அரசியல் நகர்ந்தது.

 வைரமுத்து

வைரமுத்து

ஆண்டாள் பிரச்சனை விஸ்வரூபமெடுக்கும்போது, வைரமுத்து வருத்தம் சொல்லி இருந்தார்.. ஆனாலும் இராமகோபாலன் விடவே இல்லையே.. தமிழ்நாட்டில் சுனாமி வராம இருக்கணும்னா வைரமுத்து மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவர்.

 கிருஷ்ணர்

கிருஷ்ணர்

இருந்தாலும் இவர் பெருமளவு மோதியது திக. தலைவர் வீரமணியிடம்தான்.. நிறைய விஷயங்களில் இவர்களுக்குள் கருத்து வேற்றுமையும், விவாதங்களும் வந்து கொண்டே இருந்தது.. சரமாரியாக அறிக்கை விட்டு கொள்வார்கள்.. ஒருமுறை "பகவான் கிருஷ்ணர் பற்றி வீரமணி பேசியதற்கு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்... தேர்தல் நேரத்திலும் கூட கி.வீரமணி உள்ளிட்டோர் ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவோரை சாடி பேசி வருகிறார்கள்... இந்த பேச்சை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதையும் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்" என்றெல்லாம் சாடினார்.

கொள்கை

கொள்கை

அதேபோல, வீரமணியும் பாஜகவை, தாறுமாறாக விமர்சிக்கவே செய்வார். ஆனால், இராமகோபாலன் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனதும், அவர் உடல்நலம் நன்றாகி வர வேண்டும் என்று அறிக்கை விட்டது இதே வீரமணிதான். "கொள்கை மாறுபாடுகள் மனிதநேயத்திற்கு ஒருபோதும் தடையாக இருக்கவே கூடாது என்றார் வீரமணி.

 சமுதாய பணி

சமுதாய பணி

ஒருமுறை, ஒரு பிரபல வாரப்பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவரிடம் ஏன் இன்னமும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டனர்.. அதற்கு இராமகோபாலன் "நீங்க எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு படுற பாட்டை பார்த்தப்பறமும் இப்படி ஒரு வருத்தம் வருமா எனக்கு? 19 வயசுல சமுதாய பணிதான் முக்கியம்னு வந்துட்டேன்.. வருமானமே இல்லாதவனுக்கு யார் பொண்ணு தருவாங்க? அதுவும் இல்லாமல், எனக்கு கல்யாணம் செய்யுற ஆசையே இல்லை.. அதான் அப்படியே இருந்துட்டேன்" என்றாராம்.. இந்து சமுதாய ஒருங்கிணைப்பு பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட இராமகோபாலன் புகழ் என்றென்றும் இந்துக்களின் மனதில் தங்கி இருக்கும்!

English summary
Rama Gopalan a bachelor and fighter till his last breath
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X