சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வட்டிக்கு பணம் தரும் செயலிகளை இயக்குவது யார்... பின்னணி பற்றி விரிவாக விசாரிக்க வேண்டும் -ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: வட்டிக்கு பணம் தரும் செயலிகளை இயக்குவது யார் என்று விரிவான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்டோரின் உயிர்களை ஆன்லைன் மூலம் இயங்கும் கந்துவட்டி செயலிகள் பறித்திருக்கின்றன. டிஜிட்டல் முறையில் கந்துவட்டி நடத்தி வந்த சீனர்கள் இருவர் உட்பட 4 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.

Ramadoss asks, Who operates the Apps that pay interest

ஆன்லைன் மூலம் இயங்கும் கந்துவட்டி செயலிகள் குறித்து வெளியாகியுள்ள முதற்கட்ட அறிக்கை அதிர்ச்சி தரக்கூடிய வகையிலும், அச்சம் தரக் கூடிய வகையிலும் உள்ளது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், கென்யா, தென் ஆப்ரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் கந்துவட்டி செயலிகள் குறித்து புகார் எழுந்ததை அடுத்து அங்கு இது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியாவில் மட்டும் இதுவரை ஆன்லைன் கந்துவட்டி செயலிகளை தடை செய்யாதது ஏன் எனத் தெரியவில்லை. டிஜிட்டல் கந்துவட்டி தொழில் தனி நபர்களை தற்கொலைக்கு மட்டும் தூண்டாமல் தனி நபர்களின் அனைத்து விவரங்களயும் திருடுகிறது.

தமிழக பாஜக சார்பில் பட்டிதொட்டியெங்கும் 'நம்ம ஊரு பொங்கல்'... எல்.முருகன் அறிவிப்பு..!தமிழக பாஜக சார்பில் பட்டிதொட்டியெங்கும் 'நம்ம ஊரு பொங்கல்'... எல்.முருகன் அறிவிப்பு..!

இதனால் இந்தியாவில் கடந்த காலங்களில் வழங்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாத நிதி நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்வதுடன் கந்துவட்டிக்கு பணம் தரும் செயலிகளை இயக்குவது யார் என்ற விரிவான விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடவும் வேண்டும்.

English summary
Ramadoss asks, Who operates the Apps that pay interest
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X