சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செய்தியாளர்கள் சந்திப்பை அரசு நடத்தக்கூடாது... அதற்கு பதில் இப்படி செய்யலாம்.. ராமதாஸ் கூறும் யோசனை

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை அரசு நேரடியாக நடத்தக் கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் பத்திரிகையாளர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி தமக்கு மிகவும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பணிமுறைகளை மாற்றுக

பணிமுறைகளை மாற்றுக

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் ஆளாவோர் பட்டியலில் மருத்துவர்களுக்கு அடுத்தப்படியாக பத்திரிகையாளர்கள் தான் உள்ளனர். மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியிலும் கணிசமான பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களைப் பொறுத்த வரை பணி முறைகளை சற்று மாற்றியமைப்பதன் மூலம் அவர்களை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்ற முடியும்.

நிகழ்ச்சிகள் ரத்து

நிகழ்ச்சிகள் ரத்து

கொரோனா பரவல் தொடங்கிய காலத்திலிருந்தே அரசியல் கட்சிகளின் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தொண்டு நிறுவன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன. களத்திற்கு நேரடியாக சென்று செய்தி சேகரிக்க வேண்டிய குற்றங்கள், விபத்துகள் போன்றவையும் இப்போது நடப்பதில்லை. மாறாக, கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள், முதலமைச்சர், அமைச்சர்கள், ஆகியோரின் செய்தியாளர் சந்திப்புகளை பதிவு செய்து செய்தியாக்குவது தான் அவர்களின் முக்கியப் பணியாக உள்ளது.

அரசுக்கு யோசனை

அரசுக்கு யோசனை

கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டு, அவை குறித்த செய்திகளை ஊடகங்களுக்கு தெரிவிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டால், பத்திரிகையாளர்கள் களத்திற்கு வர வேண்டிய தேவை இருக்காது; அதன் மூலம் கொரோனா ஆபத்திலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அதிகாரிகளில் தொடங்கி அமைச்சர்கள், முதலமைச்சர் வரை அனைவரும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கும் தகவல்களை செய்திக்குறிப்புகளாக ஊடகங்களுக்கு அனுப்பலாம். ஒருவேளை இதுகுறித்த செய்திகள் தொலைக்காட்சிகளில் காட்சிகளாகத் தான் வர வேண்டும் என்று அரசு விரும்பினால், திரைப்படப் பிரிவு அல்லது செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் படம் பிடித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

கூடுவதை தவிர்ப்போம்

கூடுவதை தவிர்ப்போம்

ஒரு செய்தியாளர் சந்திப்பை நேரலை செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு தொலைக்காட்சியில் இருந்தும் செய்தியாளர், ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவு உதவியாளர், நேரலை வாகன பொறுப்பாளர், நேரலை தொழில்நுட்ப பணியாளர், அவரது உதவியாளர், வாகன ஓட்டுனர் என 7 பேர் செல்ல வேண்டும். குறைந்தது 20 தொலைக்காட்சிகள் செய்தியாளர் சந்திப்பில் செய்தி சேகரிக்க வந்தால் குறைந்தது 140 பேர் கூடுவர். அவர்களுடன் அச்சு ஊடக செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் ஆகியோரையும் சேர்த்தால் செய்தியாளர் சந்திப்பில் குறைந்தது 250 பேராவது கூடுவார்கள். இதைத் தவிர்த்தாலே கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாவதிலிருந்து பத்திரிகையாளர்களைக் காப்பாற்ற முடியும்.

English summary
ramadoss demands, government should not hold a press conference
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X