சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதனிலைத் தேர்வு மாற்றம்- தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    குரூப் 2 தேர்வில் மொழித்தாள் நீக்கம்: குவியும் கண்டனங்கள், பாராட்டுகள்-வீடியோ

    சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதனிலைத் தேர்வு முறையில் மாற்றம் செய்திருக்கும் தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:

    டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள தொகுதி-2 முதனிலை தேர்வில் பொதுத்தமிழ் தாள் நீக்கப்பட்டாலும் அதில் கேட்கப்படும் வினாக்கள் முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்கள், திருக்குறள் என தமிழ் சார்ந்த பகுதிகள் இத்தேர்வுகளில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    Ramadoss hails changes in TNPSC Groups 2 Exams

    தமிழக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்கள், தமிழைப் படிக்காதவர்கள் இனி வெற்றி பெற முடியாது என்ற நிலையை டி.என்.பி.எஸ்.சி. ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக மாணவர்களுக்கு சாதகமானதாக அமையும்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பாராட்டுகள்.... தமிழ் வாழ்க!

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். முன்னதாக தமிழ் மொழிப் பாடம் நீக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    PMK Founder Dr Ramadoss hails the Tamilnadu Govt's Changes in the TNPSC Groups 2 Exams.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X