சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொங்கல் மதுவிற்பனை ரூ.605 கோடி... வேதனையில் வயிறு எரிகிறது- ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ரூ.605 கோடிக்கு மது விற்பனை என்ற செய்தியை கேட்டதும் வேதனையில் வயிறு எரிவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு இந்தாண்டு மதுவிற்பனை உயர்ந்திருக்கிறது என்பதை கேட்கும் போது மிகுந்த வேதனை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;

மதுவை கைவிடு

மதுவை கைவிடு

பொங்கல் திருநாளில் புதுப்பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்கல் தான் பொங்கும்.ஆனால், இந்த பொங்கலுக்கு குடிமகன்களின் வயிற்றில் சாராயம் தான் பொங்கியிருக்கிறது. முதல் பொங்கல்வயிற்றை நிறைக்கும்.இரண்டாவது பொங்கல் வயிற்றை அரிக்கும். தமிழா நீ மதுவை கைவிட்டு தலைநிமிர்வது எந்நாளோ?

ரூ.605 கோடி

ரூ.605 கோடி

தமிழ்நாட்டில் பொங்கல் விழாவையொட்டி ரூ.605 கோடிக்கு மது விற்பனை. வரலாற்று சாதனையாம். ஆஹா.... இதுவரை தமிழ்நாட்டு குடிமகன்கள் குடிப்பதில் சாதனைகளை மட்டும் தான் படைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்களாம். அடக் கொடுமையே?

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த ஆணையிட சீமான் மீண்டும் வலியுறுத்தல்தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த ஆணையிட சீமான் மீண்டும் வலியுறுத்தல்

தமிழன்

தமிழன்

தமிழ்நாட்டில் பொங்கல் விழாவின் 3 நாட்களில் ரூ. 605 கோடிக்கு மது விற்பனை: செய்தி - கரும்பு விற்பனையாகவில்லை... இஞ்சி, மஞ்சள் கொத்துகளை வாங்க ஆள் இல்லை. மதுக்கடைகளில் மட்டும் மாநாட்டுக் கூட்டம். தமிழன் என்றொரு இனமுண்டு... தனியே அவர்க்கொரு குணமுண்டு என்பார்களே.... அது இது தானோ?

வயிறு எரிகிறது

வயிறு எரிகிறது

இதுவரை இல்லாத அளவுக்கு பொங்கல் திருநாளில் ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும். இந்த அவலம் என்று தீரும்?

English summary
ramadoss says, in pongal holidays 605 crores of Liquor sale is distressing news
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X