சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சினிமாவில் புகைப்பிடிப்பதை இன்னமும் பல நடிகர்கள் தொடர்கின்றனர்... ராமதாஸ் வேதனை

Google Oneindia Tamil News

சென்னை: திரைப்படங்களில் புகைபிடிப்பதை இன்னமும் கூட பல நடிகர்கள் தொடருவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இது தொடர்பாக ட்வீட் வெளியிட்டுள்ள அவர் இதனைக் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிரிக்கெட், சினிமா, வெளிநாட்டு ஊடக சேவைகள் மூலம் புகையிலைப் பொருட்களை திணிப்பதை தடுத்து நிறுத்துவதால், பல லட்சம் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;

பிரதமர் கேர் நிதியில் இருந்து இடம்பெயர் தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீங்க? காங். கேள்விபிரதமர் கேர் நிதியில் இருந்து இடம்பெயர் தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீங்க? காங். கேள்வி

ராமதாஸ் வேதனை

ராமதாஸ் வேதனை

ஆண்டுக்கு 80 லட்சம் பேர் புகையிலையால் இறந்து போகிறார்கள். இந்தியாவில் மட்டும் 13 லட்சம் பேர் புகையிலையால் இறந்து போகிறார்கள். இந்தியாவில் 10 மரணங்களில் 1-க்கு புகையிலைப் பழக்கம் காரணமாக உள்ளது. புகையிலை பழக்கத்தால் நோய்வாய்ப்பட்டு இறந்துபோகும் வாடிக்கையாளர்களுக்கு ஈடாக, புதியவர்களை இளம்வயதிலேயே அடிமையாக்கும் நோக்கில் புகையிலைப் பொருள் நிறுவனங்கள் திட்டமிட்டு விளம்பரம் செய்கின்றன

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

2019 ஐபிஎல் போட்டிகளின் போது மட்டும், 'பான் மசாலா, சர்தா, குட்கா' ஆகிய புகையற்ற புகையிலை விளம்பரங்கள் 10,452 முறை செய்யப்பட்டுள்ளன. சிகரெட் நிறுவங்கள் பெரும் பணத்தை லஞ்சமாக கொடுத்து, திட்டமிட்டு நடிகர்கள் மூலம் புகைபிடிக்கும் பழக்கத்தை திணிக்கின்றன என்கிறது உலக சுகாதார அமைப்பு.

புகைப்பிடிக்கும் காட்சிகள்

புகைப்பிடிக்கும் காட்சிகள்

தமிழ் சினிமாவில் சில முதன்மை நடிகர்கள் திரைப்படங்களில் புகைபிடிப்பதை கைவிட்டாலும், இன்னமும் கூட பல நடிகர்கள் அதனை தொடர்கின்றனர். இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஊடகசேவைகள் புகையிலை கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. பள்ளிகளுக்கு அருகேயும், கடைகளிலும், COTPA சட்ட விதிகளை மீறி, சிறுவர்களை சீரழிக்கும் வகையில் சட்டவிரோதமாக புகையிலை விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

சிறுவர்கள் குறிவைப்பு

சிறுவர்கள் குறிவைப்பு

இந்தியாவில் புகையிலை பழக்கம் அதிகரிக்கும் என 2005 ஆம் ஆண்டில் WHO கணித்தது. ஆனால், முன்னாள் அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் முயற்சியால் இந்தியாவில் புகைபிடிப்போர் அளவு 38% என்பதிலிருந்து 2015-ல் 28% ஆக குறைந்தது. கிரிக்கெட், சினிமா, வெளிநாட்டு ஊடக சேவைகள் மற்றும் சிறுவர்களை குறிவைக்கும் கடைகள் மூலமாக புகையிலைப் பொருட்களை திணிப்பதை முற்றிலுமாக தடுத்து நிறுத்துவதன் மூலமாக, பல லட்சம் எதிர்கால உயிரிழப்புகளை தடுக்க முடியும்

English summary
ramadoss says, Many actors still continue to smoke in the cinema
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X