சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சன்னையே "ஸ்டன்" ஆக்கிய டிடி.. ராமாயணம்தான் டாப்பாம்.. லாக்டவுனில் கலக்கும் தூர்தர்ஷன்!

கடந்த ஒரு மாத காலத்தில் நாட்டிலேயே அதிகமான மக்களால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சேனலாக தூர்தர்சன் சேனல் மாறியுள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் எத்தனை முறை ஒளிபரப்பினாலும் நாங்க பார்ப்போம் என்பதை மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். ஓல்ட் ஈஸ் கோல்ட் என்று தூர்தர்சனில் ஒளிபரப்பாகும் புராண இதிகாச தொடர்களை பார்த்து மக்களை கூறி வருகின்றனர்.கொரோனா லாக்டவுன் காலத்தில் இந்திய அளவில் மக்களால் அதிகம் பார்க்கப்படும் சேனலாக தூர்தர்சன் மாறியுள்ளது. ராமாயணம் காலை காலை 9 மணிக்கும் இரவு 9 மணிக்கும் மகாபாரதம் காலை 12 மணிக்கு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நேரத்தில் தூர்தர்சனை அதிகம் பேர் பார்த்து ரசித்து வருவதாக பிஏஆர்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாது ஸ்மார்ட்போன்களிலும் டிடியில் ஒளிபரப்பாகும் ராமாயணம், மகாபாரதத்தை பார்த்து ரசித்துள்ளனர் பார்வையாளர்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வயது வித்தியாசம் இன்றி இன்றி இந்த புராண தொடர்களையும், சக்திமானையும் பார்த்து ரசித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 24ஆம் தேதி போடப்பட்ட ஊராடங்கு மே 3ஆம் தேதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள் இல்லை, தியேட்டர்கள் இல்லை மக்களின் ஒரே பொழுது போக்கு தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே.சீரியல் சூட்டிங், திரைப்பட படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. சினிமா, சீரியல், நடிகர், நடிகையர்களின் பேட்டியை வைத்து ஓட்டிக்கொண்டிருந்த பல சேனல்களில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய சீரியல்களை தூசு தட்டி ஒளிபரப்புகின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட புதிய சேனல்களில் ஏற்கனவே ஒளிபரப்பான சீரியல்களே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதால் மக்களுக்கு போர் அடிக்க ஆரம்பித்து விட்டது.

அது ஒரு தூர்தர்சன் காலம்

அது ஒரு தூர்தர்சன் காலம்

1980களில் நாட்டில் இருந்த ஒரே தொலைக்காட்சி சேனல் தூர்தர்சன்தான். அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்தான் மக்களின் ஒரே பொழுது போக்கு. சினிமா நிகழ்ச்சிகள் தவிர புராண இதிகாச தொடர்களையும் ஞாயிறு கிழமைகளில் காலை நேரங்களில் ஒளிபரப்பி மக்களை உற்சாகப்படுத்தியது தூர்தர்சன். இதிகாச டிவி தொடர்களில் நடித்த நடிகர், நடிகையர்களை நிஜ ராமராகவும், சீதையாகவும் கூட மக்கள் வணங்கியிருக்கின்றனர். டிவி சீரியல் நாயகர்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து நாடாளுமன்றத்திற்கே அனுப்பியிருக்கின்றனர். இப்போது மீண்டும் பழைய சீரியல்கள் ஒளிபரப்பாகி தூர்தர்சன் அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

பிஏஆர்சி அமைப்பு

பிஏஆர்சி அமைப்பு

கடந்த ஒரு மாத காலத்தில் நாட்டிலேயே அதிகமான மக்களால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சேனலாக தூர்தர்சன் சேனல் மாறியுள்ளது. ராமாயாணமும், மகாபாரதமும் டிவி ரசிகர்களை தூர்தர்சன் பக்கம் திருப்பியுள்ளது. இதனை தொலைக்காட்சி பார்வையாளர் ஆய்வு அமைப்பு பிஏஆர்சி தெரிவித்துள்ளது.

35 ஆண்டுகளுக்கு முன்பு தூர்தர்சனில் ஒளிபரப்பான ராமாயணம், மகாபாரதம் இதிகாச தொடர்கள் தற்போது கொரோனா லாக்டவுன் காலத்தில் மீண்டும் தூர்தர்சனில் ஒளிபரப்பாகிறது. ராமாயணம் காலை காலை 9 மணிக்கும் இரவு 9 மணிக்கும் மகாபாரதம் காலை 12 மணிக்கு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நேரத்தில் தூர்தர்சனை அதிகம் பேர் பார்த்து ரசித்து வருவதாக பிஏஆர்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

பழைய ஹிட் சீரியல்கள்

பழைய ஹிட் சீரியல்கள்

தூர்தர்சனில் பழைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாவதை பார்த்து தனது பார்வையாளர்களை தக்க வைக்க ஸ்டார் பிளஸ், விஜய் டிவியில் மகாபாரதம் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. சன் டிவியும் தனது பார்வையாளர்களை தக்க வைக்க 20 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட் அடித்த மெட்டி ஒளி, தங்கம் ஆகிய சீரியல்களை ஒளிபரப்புகிறது. என்னதான் டிடிக்கு போட்டியாக பழைய சீரியல்களை தூசு தட்டினாலும் பார்வையாளர்களை கவர்வதில் இரண்டாவது இடத்திலேயே உள்ளது சன்டிவி.

தூர்தர்சன் நம்பர் 1

தூர்தர்சன் நம்பர் 1

கடந்த வாரத்தில் தூர்தர்சனை 27,32549 பேர் பார்த்துள்ளனர். நம்பர் ஒன் இடத்தை கடந்த சில வாரங்களாகவே தக்க வைத்துக்கொண்டுள்ளது. டிடி நேசனல். இதனையடுத்து சன்டிவியை 15,55821பேர் பார்த்துள்ளனர். டங்கல் டிவி மூன்றாவது இடத்திலும் சோனி சேனல்கள் 4,5வது இடத்திலும் உள்ளது. இது இந்திய அளவிலான பார்வையாளர்கள் வரிசை.

தமிழ்சேனல்களில் நம்பர் 1

தமிழ்சேனல்களில் நம்பர் 1

அதே நேரத்தில் தமிழ்சேனல்களை பார்க்கும் பார்வையாளர்களை தக்கவைப்பதில் சன்டிவி முதலிடத்தில் உள்ளது. புதிய திரைப்படங்கள்,பழைய ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது சன் டிவி, அதற்கு அடுத்த இடத்தில் சன் குழும சேனலாக கே டிவி 4,33398 பார்வையாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பார்வையாளர்களை கவராத சேனல்கள்

பார்வையாளர்களை கவராத சேனல்கள்

ஸ்டார்விஜய் மூன்றாவது இடத்திலும், ஜீ தமிழ் 4 வது இடத்திலும் ஸ்டார் விஜய் சூப்பர் 5வது இடத்திலும் உள்ளது. எப்போதுமே ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு பார்வையாளர்கள் அதிகம் உண்டு. இப்போது சீரியல்கள் ஒளிபரப்பாவது இல்லை என்பதால் ஜீ தமிழ் டிவி அதிக பார்வையாளர்களை இழந்துள்ளது. அதே நேரத்தில் ஸ்டார் விஜய் சேனலில் காமெடி நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் அதை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

விளம்பரங்கள் குறைவு

விளம்பரங்கள் குறைவு

ஸ்போர்ட்ஸ் சேனல்கள் எல்லாமே 30 ஆண்டுகளுக்கு முந்தைய போட்டிகளை குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புகின்றன. விளம்பர வருவாய் பல சேனல்களுக்கு குறைந்து போய் விட்டதை மறக்க முடியாது. அதே நேரத்தில் பார்வையாளர்கள் விளம்பரங்களின் தொந்தரவு இன்றி சீரியல்களையும், சினிமாக்களையும் பார்த்து ரசிக்க முடிகிறது. இல்லாவிட்டால் 2 நிமிடம் சீரியல் 5 நிமிடம் விளம்பரம் என போட்டு பார்வையாளர்களை எரிச்சல்படுத்தி வந்தன டிவி சேனல்கள் இப்போது அதற்கு ஒரு விடிவு காலம் பிறந்து விட்டது.

தனியார் சேனல்களுக்கு பொறாமை

தனியார் சேனல்களுக்கு பொறாமை

தனியார் சேனல்களின் வருகைக்குப் பின்னர் டிவி பார்வையாளர்களின் பார்வைக்கு தூரமாக போன தூர்தர்சன் கொரோனா லாக்டவுன் காலத்தில் தூர்தர்சன் பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. தூர்தர்சன் சேனலுக்கு அதிகரித்துள்ள பார்வையாளர்கள் எண்ணிக்கை தனியார்சேனல்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க வைத்துள்ளது. தூர்தர்சனுக்கு பெருமை... தனியார் சேனல்களுக்கு பொறாமைதான்.

English summary
Ramayana and Mahabharatham on DD telecast emerges as most watched channel
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X